நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் 2013-14-ம் ஆண்டில் ஏற்பட்ட சம்பா நெல் சாகுபடி பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் முழுமையான காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரணம் கோரி அந்த பகுதி விவசாயிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், குறிப்பிட்ட குறு வட்டப் பகுதிகளுக்கு மட்டும் குறைவான பயிர் காப்பீடு தொகை அளிக்கப்பட்டது.
வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.