பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை: ஐ.நா. குழுவின் அறிக்கை இன்று தாக்கல்

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று(திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

Published On :

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று(திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று கூறி வந்த அமெரிக்கா, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தற்போது உள்நாட்டு விசாரணையே போதுமானது என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்த தீர்மானத்தையும், இந்தக் கூட்டத்தில் அந்த நாடு கொண்டு வர உள்ளது.  இலங்கையில், கடந்த 2009-ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், போர்க் குற்றங்கள் நடைபெற்றதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, ஐ.நா. விசாரிப்பதற்கு, அப்போதைய அதிபர் ராஜபட்ச எதிர்ப்புத் தெரிவித்தார். பின்னர், மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான புதிய அரசு அமைந்ததும், ஐ.நா.வின் விசாரணைக்கு அனுமதியளித்தது.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், தனது விசாரணை அறிக்கையின் நகலை இலங்கை அரசிடம் வெள்ளிக்கிழமை அளித்தது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பதற்காக, இலங்கை அரசுக்கு 5 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஐ.நா. விசாரணை குழு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. அத்துடன் இலங்கை அரசின் பதில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில்தான் இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச நடத்தப்படுமா? அல்லது இலங்கை அரசே இதுபற்றி விசாரணை நடத்திக் கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. எனினும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப் பட்டது. தொடர்பாக அமெரிக்கா புதிய தீர்மானம் கொண்டு வர இருப்பதால் சர்வதேச விசாரணை என்கிற கோரிக்கை நீர்த்துப் போய்விடும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.