விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மூதாட்டியிடம் 3 பவுன் நகை நூதன முறையில் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் செயினை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :21 செப்டம்பர் 2015, 5:06 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் செயினை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜூவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி ஜெயலட்சுமி (67). இவர் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் நெசவாளர் காலனி இறக்கத்தில் உள்ள நாகம்மாள் புற்றுக் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளார். அங்கு அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்துள்ளனர். ஒருவர், ஜெயலட்சுமியிடம் வந்து கழுத்தில் ஏன் நகை அணிந்திருக்கிறீர்கள் என்று போலீஸ் அதிகாரிபோல் கேட்டுக் கொண்டு ஜெயலட்சுமியை மற்றொரு நபர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார்.

இருவரும் காலம் கெட்டுப்போய் கிடக்கிறது. செயினை வயதான காலத்தில் போடாதீர்கள். இதனைக் கழற்றி தாருங்கள். மடித்து தருகிறோம் என்று கூறி ஜெயலட்சுமியன் 3 பவுன் செயினை வாங்கியுள்ளார். வாங்கியவர்கள் செயினை ஒரு தாளில் மடிப்பது போல் மடித்துவிட்டு, வேறொரு பொட்டலத்தை கர்சிப்பில் சுற்றுக் கொடுத்து, வீட்டிற்கு பத்திரமாய் கொண்டுபோங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்கள். வீட்டிற்குச் சென்ற ஜெயலட்சுமி, கணவர் கணேசனிடம் பொட்டலத்தைக் கொடுத்து போலீஸார் தன்னை பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாக் கூறியுள்ளார். பொட்டலத்தை திறந்த பார்த்த கணேசன் நகைகளைக் காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.