இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

புழல் சிறையில் கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட காவலர்கள் விடுவிப்பு

புழல் சிறையில் கைதிகள்- சிறைக் காவலர்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர மோதலில், ஜெயிலர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

Updated On :

புழல் சிறையில் கைதிகள்- சிறைக் காவலர்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர மோதலில், ஜெயிலர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

இந்த மோதலில் இருவரை பணயக் கைதிகளாக, கைதிகள் சிறைப் பிடித்தனர். பின்னர் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து புழல் சிறையில் சிறைபிடித்து வைத்திருந்த 2 காவலர்களையும் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் கைதிகள் விடுவித்தனர். 

சென்னை புழல் சிறையில் ஜெயிலர் இளவரசன் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்யும் போது, அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பக்ருதீன் ஆகியோர் அறைகளில் சத்தம் வந்துள்ளது. அதைக்கேட்டு எட்டிப்பார்த்த போது ஜெயிலர் இளவரசனை, அவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர். இதை தடுக்க ஓடிவந்த சிறைக்காவலர் முத்துமணி, துணை ஜெயிலர் மோகன், இரண்டாம் நிலை காவலர் மாரியையும் இருவரும் தாக்கி 4 பேரையும் சிறைபிடித்தனர். 

கைதிகள் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த சிறைக்காவலர் முத்துமணி, ஜெயிலர் இளவரசன், தலைமைக் காவலர் டேவிட் செல்வராஜ் ஆகியோர் ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். துணை ஜெயிலர் மோகன், இரண்டாம்நிலை காவலர் மாரியையும் சிறைக்குள்ளேயே சிறைபிடித்தனர். 

இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள இருவரையும் மீட்க டிஐஜி மவுரியா, சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி ஆகியோர் சிறைக்குள் சென்று கைதிகளுடன் சமரசப் பேச்சு நடத்தினர். இறுதியில் 4 மணி நேரத்திற்கு பின்னர் பிடித்து வைத்திருந்தவர்களை கைதிகள் விடுவித்தனர். சிறைத்துறை உயரதிகாரிகளின் விசாரணையில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இறைச்சி பிரியாணியை தண்டனை சிறைவாசிகளுக்கு மட்டும் வழங்கிய சிறைத்துறை பண்ணா இஸ்மாயில், பக்ருதீன் ஆகியோர் உள்ள விசாரணை சிறைக்கு மட்டும் இறைச்சி பிரியாணி வழங்காததால் இந்த மோதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்ததுள்ளது.

இதனிடையே கைதிகளின் தாக்குதலில் காயமடைந்து காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.