அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னையின் திருத்தல 153-வது ஆண்டு பெருவிழா திங்கட்கிழமையன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 7-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு இத்தாலி அருட்தந்தை சவரிமுத்து தலைமையில் திருச்சப்பர செபமாலை பவனி, திருப்பலி நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மிக்கேல் அதிதூதர் சப்பர பவனியும், தொடர்ந்து இரவு 7.55 மணிக்கு சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ரெமிஜியூஸ் லியோன் தலைமையில் திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் வள்ளியூர் வி.எம்.எஸ்.எஸ்.எஸ். இயக்குனர் அருட்தந்தை அருள்சகாயம் தலைமையில் திவ்விய நற்கருனை ஆசீர் மற்றும் மறையுறை நடந்தது. நிகழ்ச்சியில், நெடுங்குளம் பங்குத்தந்தை ஸ்தனிஸ் ஜோ, அடைக்கலாபுரம் தூய சூசை அறநிலைய பங்குத்தந்தை சந்தியாகு மற்றும் திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர்.

 திருவிழா காலங்களில் தினசரி அதிகாலையில் திருச்செபமாலை பவனியும், திருப்பலியும், பகல் 12 மணிக்கும், 3 மணிக்கும் திருச்செபமாலை மற்றும் பிராத்தனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருச்செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவையும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான அக்டோபர் 6-ம் தேதி (செவ்வாய்கிழமை) இரவு 9 மணிக்கு அதிசய ஆரோக்கிய அன்னையின் அற்புதச் சப்பரப்பவனி நடக்கிறது. 10-ம் திருநாள் அதிகாலை 6 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறையுரை, திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை சி.தே.ஜஸ்டின் மற்றும் தூய அன்னாள் சபை அருட்சகோதரிகள், விழா பணிக்குழுவினர், ஊர் நிர்வாகக் குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com