அணைகளுக்கு 4,000 கனஅடி நீர்வரத்து: பாபநாசம், சேர்வலாறு அணைகள் தீவிர கண்காணிப்பு

பாபநாசம் அணை  முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால்  வியாழக்கிழமை அதிகாரிகள் முகாமிட்டு அணையின் நீர்வரத்தை கண்காணித்னர்.
Updated on
1 min read

பாபநாசம் அணை  முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால்  வியாழக்கிழமை அதிகாரிகள் முகாமிட்டு அணையின் நீர்வரத்தை கண்காணித்னர். அணைகளின் நீர்வரத்தை பொறுத்து பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்வலாறு, அடவிநயினார், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 8 அணைகள் நிரம்பின. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி 141.60 அடியை தாண்டியது. அணைக்கு விநாடிக்கு 2007 கனஅடி நீர்வரத்து இருந்தது.

இதேபோல் சேர்வலாறு அணை நிரம்பிய நிலையில் அணைக்கு விநாடிக்கு 1000 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 149.57 அடியாக இருந்தது. 153 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 150 அடி வரைதான் நீரை சேமித்து வைக்கப்படும்.

இவ்விரு அணைகளின் நீர்வரத்தை பொறுத்து உபரிநீரை திறந்து விடும் வகையில் அதிகாரிகள் முகாமிட்டு தயாராக உள்ளனர். அணைகளில் மின்வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்து கண்காணித்து வருகின்றனர்.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 470 கனஅடி, கடனாநதி அணைக்கு 140.37 கனஅடி, ராமநதி அணைக்கு 35 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 164 கனஅடி, அடவிநயினார், வடக்குப் பச்சையாறு அணைகளுக்கு தலா 45 கனஅடி, நம்பியாறு அணைக்கு விநாடிக்கு 200 கனஅடியும் நீ்ர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் நிலவரம்: மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 93.35 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.86 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 132 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது.

உபரிநீர் திறப்பு: கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளில் இருந்து 600 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பகலில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளின் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-3, பாபநாசம் கீழ் அணை-4, சேர்வலாறு அணை-7, மணிமுத்தாறு அணை-1, ராமநதி அணை-7, கருப்பாநதி அணை-8, குண்டாறு அணை-2, அடவிநயினார் அணை-15, அம்பாசமுத்திரம்-52.2,

சேரன்மகாதேவி-68, கன்னடியன் அணைக்கட்டு-9.2, பாளையங்கோட்டை-21, திருநெல்வேலி-32, சங்கரன்கோவி்ல்-59, தென்காசி-11, செங்கோட்டை-5, ஆய்க்குடி-5.2, ஆலங்குளம்-4.2, சிவகிரி-14.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com