மருத்துவத் துறையில் காலிப் பணியிடம்: பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்க்க அழைப்பு

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்த்துப் பயன்பெறுமாறு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
Updated on
1 min read

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்த்துப் பயன்பெறுமாறு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.எஸ்.ஆர்.பி.,) சார்பில் தமிழகம் முழுவதும் 580 ஓட்டுநர் காலிப் பணியிடங்களும், 676 ஆய்வக உதவியாளர் தொழில் நுட்பர் நிலை-3 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஆய்வக உதவியாளர் தொழில்நுட்பர் நிலை 3 பணியிடத்துக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட சி.எம்.எல்.டி., பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

இப் பணியிடங்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக உத்தேச பதிவு மூப்பு மற்றும் பட்டியல் வேலைவாய்ப்புத் துறையின் www.tnvelaivaaippu.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள் தங்களது பதிவை இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் விடுபட்டு இருந்தால் மே 4-ம் தேதிக்குள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.

சி.எம்.எல்.டி., கல்வித் தகுதியைப் பொருத்தவரை அங்கீகரிக்கப்பட்ட 52 கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே தகுதியுள்ளவர்கள் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com