மயிலாடுதுறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து.2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் சாவு.30 பேர் படுகாயம்

நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகே சாலையோரத்திலுள்ள குளத்தில்ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குளானதில்,பேருந்தில் பயணித்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பேருந்தில்  சிக்கி உயரிழந்தனர்.படுகாயமடந்த நிலையில் மீட்கப்ப்ட 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Updated on
1 min read

நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகே சாலையோரத்திலுள்ள குளத்தில்ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குளானதில்,பேருந்தில் பயணித்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பேருந்தில்  சிக்கி உயரிழந்தனர்.படுகாயமடந்த நிலையில் மீட்கப்ப்ட 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னையிலிருந்து-மயிலாடுதுறை வழியாக தஞ்சை மாவட்டம்,பேராவூரணிக்குச் சென்ற  தனியார் அம்னி பேருந்து,மயலாடுதுறை-திருவாரூர் சாலையில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றுக்கொண்டிருந்தது.

நாகை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,பெரம்பூர் காவல் சரகம் பண்டாரவாடை  ஊராட்சி நெய்குப்பை,கன்னியம்மன் கோயில் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து,சாலையோரத்திலுள்ள குளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில்,மன்னார்குடி வாணக்காரத் தெருவைச் சேர்ந்த விஜய்ஆனந்த்-பேச்சியம்மள் தம்பதிகளின் குழந்தைகளான சாதனாசுபாரீ(3 மாதக்குழந்தை),ஜான்சிராணி(4),பட்டுக்கோட்டை அதந்தைரோடு மாணி்க்கம் செட்டியார் மகன் நாடிமுத்து(36)ஆகியோர் பேருந்தில் சிக்கி,சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் கிராம மக்களால் மீட்க்கப்பட்ட பேருந்து  பயணிகள் 30 பேர் மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறி்த்து செய்தியறிந்த,துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் டாக்டர்.சரவணக்குமார்(மயிலாடுதுறை),வெங்கடேசன்(சீர்காழி),பெரம்பூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன் மற்றும் மயிலாடுதுறை தீயனைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும்,விபத்துக்குப் பின்னர் தப்பியோடிய,ஆம்னி பேருந்து ஓட்டுனரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com