சகாப்தமாக வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சரித்திரமாகியுள்ளார் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.
34 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தனக்கென தனித்துவத்தை வகுத்துக் கொண்டு, ஆளுமைமிக்க தலைவராக, 5 முறை தமிழகத்தின் முதல்வராக பணியாற்றி சகாப்தமாக வாழ்ந்த முதல்வர் ஜெயலலிதா, சரித்திரமாகியுள்ளார்.
அவரது மறைவால் வாடும் அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் இந்திய தேசிய லீக் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.