விழுப்புரத்திலிருந்து 120 போலீஸார் சென்னை விரைவு

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து டிஎஸ்பி தலைமையில் 120 போலீஸôர் திங்கள்கிழமை மாலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். 
Published on

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து டிஎஸ்பி தலைமையில் 120 போலீஸôர் திங்கள்கிழமை மாலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். 

     சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடமைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துமனை முன்பாக கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைமைவர்கள், அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 

  முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சென்னையில் அசம்பாதவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதால் போலீஸôர் உஷர்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்கு போலீஸôர்  வரவழைக்கப்பட்டுள்ளனர். 

 இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து டிஎஸ்பி ஏழிலரசு தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள், 9 உதவிக் காவல் ஆய்வாளர்கள் உள்பட 120 போலீஸôர் திங்கள்கிழமை மாலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com