சாதி, ஆணவக் கொலையை தடுக்கும் வகையில் கடுமையான சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி, காரைக்காலில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் தே.வின்சென்ட்ராஜ் தலைமை வகித்தார்.
தமிழகத்தின் உடுமலையில் ஆதிதிராவிட மாணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். தலித் சமுதாயத்திற்கு எதிரான வன்முறையை தூண்டும் அரசியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெண்கள் பணி செய்யுமிடங்களில், பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும். சாதி மற்றும் ஆணவக் கொலை பெருகிவரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனி சட்டம் இயற்றவேண்டும். கொலை குற்றத்தில் ஈடுபடுவோருக்கு சாதகமாக நடந்துகொள்ளும் காவல்துறை அதிகாரிகள் மீது பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மனித உரிமை அமைப்புகள் மீதுள்ள தடைகளை அகற்றவேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி பெயர் கேட்பதை தடை செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.