சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் நாளை தீச்சட்டி ஏந்துதல் நிகழ்ச்சி

பெரம்பலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 22) மாலை தீச்சட்டி ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Updated on
1 min read

பெரம்பலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 22) மாலை தீச்சட்டி ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இக் கோயிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, கடந்த 10 ஆம் தேதி காலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மே 17 ஆம் தேதி பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், மதுரகாளியம்மனுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து, நாள்தோறும் இரவு யானை, குதிரை, அன்னம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், மாலை 3 மணிக்கு மேல் அலகு குத்துதல் மற்றும் தீச்சட்டி ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, 26 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, 27 ஆம் தேதி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் நிகழ்ச்சியும், 28 ஆம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், 30 ஆம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறிதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, திருச்சி உதவி ஆணையரும், தக்காருமான ஜ. முல்லை, செயல் அலுவலர் பி. ஜெயதேவி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com