விருதுநகர்,
விருதுநகர் அல்லம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற இருந்த திருமணத்தை போலீஸôர் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, தாய் இல்லை தந்தை சிறை யில் இருக்கிறார். இதனால், அச்சிறுமி தனது தம்பியுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அச்சிறுமிக்கும் உறவினரான ரமேஷ்குமார்(26) என்பவருக்கும் ஞாயிறு அன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தகவல் திருமணம் நடைபெற உள்ள சிறிது நேரத்திற்கு முன்னர் தான், போலீஸ் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தெரிந்தது. இதையடுத்து தனியார் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்ற போலீஸர், திருமணத்தை நிறுத்துங்க என கூச்சலிட்டபடி சென்றனர்.
சினிமா பாணியில் நடைபெற்ற இச்சம்வத்தை கண்ட திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், போலீஸôருக்கும் திரு மண வீட்டாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதாம். திருமணம் செய்து வைத்தால் அனைவரையும் கைது செய்வோம் என போலீஸர் எச்சரித்ததால் தற்காலிகமாக திருமணத்தை நிறுத்த திருமண வீட்டார் ஒப்பு கொண்டனராம்.
இதையடுத்து இரு தரப்பை சேர்ந்தவர்களிடம், சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என எவுதி வாங்கி கொண்டனராம். பின்னர், சிறுமியை பாண்டியன் நகரில் உள்ள அரசு காப்பகத்தில் சமூகநலதுறை அலுவலர்கள் சேர்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.