புதுக்கோட்டையில் இம்மாதம் 26 -ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவது குறித்த வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், வரவேற்புக்குழுத் தலைவராக கவிஞர் தங்கம்மூர்த்தி, செயலராக அ.மணவாளன், பொருளராக ஆர்.சுப்பிரமணியன், ஆலோசகர்களாக சீனு.சின்னப்பா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, குரு.தனசேகரன், இரா.சம்பத்குமார், மு.ராமுக்கண்ணு, அ.லெ.சொக்கலிங்கம், ஆர்.சி.உதயகுமார், எஸ்விஎஸ்.ஜெயக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக மருத்துவர்கள் எஸ்.ராமதாஸ், கே.எச்.சலீம், நா.ஜெயராமன், சண்முக பழனியப்பன், கே.மோகன்ராஜ், கவிஞர்கள் நா.முத்துநிலவன், ஜீவி, ரமா.ராமநாதன், ஆர்.நீலா, சு.மதியழகன், இரா.தனிக்கொடி, ஆர்.எம்.வி.கதிரேசன், ராசிபன்னீர்செல்வன், ஸ்டாலின் சரவணன், எம்.குமரேசன், புதுகை செல்வா, பீர்முகம்மது, புதுகை புதல்வன், மு.கீதா, எல்.பிரபாகரன், ஆர்.ராஜ்குமார் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
புத்தகத் திருவிழா குறித்து, வரவேற்புக்குழுத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக நீடித்து வந்த புத்தகத் திருவிழாவை நவம்பர்- 26 முதல் டிசம்பர் 4 -ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை வேந்தர்கள், தமிழகத்தின் மிகச் சிறந்த கல்வியாளர்கள், இலக்கிய ஆளுமைகளை அழைப்பது எனத் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.