7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவரிடம் விசாரணை
By மதுரை | Published On : 25th July 2016 07:40 AM | Last Updated : 25th July 2016 07:40 AM | அ+அ அ- |

ஏழு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபரிடம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.
மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சலாமியா பானு(28). இவர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் சில நாள்களுக்கு முன்பு அளித்த புகார் மனுவில், அருப்புக்கோட்டையில் உள்ள வங்கியில் கள ஆய்வாளராக பணியாற்றி வரும் காதர் பாட்ஷாவுடன் மே மாதம் திருமணம் ஆனது. இந்நிலையில் ஜூன் மாதம் வெளியூருக்கு வேலை விஷயமாக செல்வதாக கூறி வீட்டில் இருந்த நகை, பணத்துடன் காதர் பாட்ஷா மாயமானார். விசாரித்ததில் அவர் இதற்கு முன்பு 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் என்பது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரிக்க ஆணையர் பரிந்துரைத்திருந்தார். இதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை காதர் பாட்ஷாவை அழைத்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.