மருத்துவப் பயன்கள் கொண்ட கறிவேப்பிலை

மருத்துவப் பயன்கள் கொண்ட கறிவேப்பிலை
Updated on
1 min read

மருத்துவப் பயன்கள் பல கொண்ட கறிவேப்பிலை சாகுபடியிலும் கணிசமான வருவாய் பெறலாம். பெரும்பாலானோர் கறிவேப்பிலையை மணத்துக்காகப் பயன்படுத்திவிட்டு உணவிலிருந்து அதை தூக்கி எறிகின்றனர்.

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள் அதை தூக்கி எறிவதில்லை. சுவைத்தும், சவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து.

சத்துக்கள்: அனைத்து வகை சமையல்களிலும் தவறாது இடம் பெற்றிருக்கும் கறிவேப்பிலையில் 0.66 சத நீர்ச் சத்து உள்ளது. 6.1 சதவீத புரதம், 0.1 சதவீத கொழுப்பு, 0.16 சதவீத மாவுப் பொருள், 6.4 சதவீத நார்ப் பொருள் மற்றும் உடலுக்கு மிகவும் தேவைப்படும் தாது உப்புக்கள் 4.2 சதமும் உள்ளது.   இது தவிர குறைந்த அளவில் காணப்படும் சத்துக்களாக 100 கிராம் இலையில் 810 மிலி கிராம் கால்சியம், 600 மிலி கிராம் பாஸ்பரஸ், 3.1 மிலி கிராம் இரும்புச் சத்து, 4.0 மிலி கிராம் வைட்டமின் சி, 2.3 மிலி கிராம் நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

மருத்துவப் பயன்கள்:   பசியைத் தூண்டி, உண்ணும் ஆவலை வளர்க்கும்.  செரிப்பதற்கு துணையாக இருக்கும்.    உடலுக்கு உரமூட்டவல்லது. வெள்ளை அணுக்களின் கிருமியை எதிர்க்கும் ஆற்றலை கறிவேப்பிலையின் சாற்றை அதிகரிக்கச் செய்கிறது.  இலையுடன் பிற மருந்துகளைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட பித்த வாந்தி, செரியாமை, வயிற்றுளைச்சல் குணமாகும்.

சாகுபடி முறைகள்: கறிப்பிலை சாகுபடிக்கு வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் மிகவும் அவசியம்.  வரிசைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 5 அடி என்ற இடைவெளியில் நடவு செய்யலாம்.  ஆண்டுக்கு ஒரு செடிக்கு 20 கிலோ தொழு உரத்தை பகிர்ந்து இடுதல் வேண்டும்.   ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 100 கிலோ இலை பறிக்கலாம்.

ஒரு கிலோ கருவேப்பிலை ரூ.12-க்கு விலை போகிறது.   ஒரு மரத்தில் இருந்து சராசரியாக ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com