தூத்துக்குடியில் வீட்டு வாசலில் கோலமிட்டு இருந்த பெண் உருட்டு கட்டையால் அடித்து கொலை

தூத்துக்குடியில் வீட்டு வாசலில் கோலமிட்டு  இருந்த  பெண் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தூத்துக்குடியில் வீட்டு வாசலில் கோலமிட்டு இருந்த பெண் உருட்டு கட்டையால் அடித்து கொலை
Updated on
1 min read

தூத்துக்குடியில் வீட்டு வாசலில் கோலமிட்டு  இருந்த  பெண் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள முத்துகிருணாபுரத்தை சேர்ந்தவர்  மாயாண்டி.  இவர் கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி  செண்பகவள்ளி இவருக்கும் எதிர்  வீட்டில் இருக்கும் அம்பிகாபதி  என்பவருக்கும் இடையே  அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலையில் வீட்டின்  வாசலில் கோலயிட்டு இருந்த செண்பகவள்ளிவை அம்பிகாபதி உருட்டு கட்டையால் தலையில் அடித்தல் படுகாயம் அடைந்த செண்பகவள்ளி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த வந்த  வடபாக போலீசார்  உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில்  முன்விரோத காரணமாக  செண்பகவள்ளியை கொலை செய்தாக  தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் அம்பிகாபதி சரண் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த  சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com