

இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம் என்ற பெருமையை அகமதாபாத் பெற்றுள்ளது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 41வது கூட்டம் போலந்தில் நடைபெற்றது. அதில் துருக்கி, போர்சுக்கல், தென் கொரியா, ஜிம்பாப்வே, க்யூபா உள்ளிட்ட 20 நாடுகள் இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக அகமதாபாத்தை தேர்வு செய்ய பரிந்துரை செய்தன.
இதனைத் தொடர்ந்து மத ஒருங்கிணைப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் அகமதாபாத் நகரம் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது. இதன்மூலம் உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் 287 -வது நகரமாக அகமதாபாத் இடம்பெற்றது.
யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து குஜராத் முதல்வர் விஜய் ரூபனி தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவின் பாரம்பரிய நகரமாக அகமதாபாத் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரம்மிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆமதாபாத்தை யுனெஸ்கோ உலக புராதன நகரமாக அறிவித்து இருப்பதை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
11 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அஹமதாபாத், இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்பட்ட 36 கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது, அதே போல் பழங்கால கட்டிடக்கலையின் படி கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இங்கு உள்ளன.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அகமது ஷாவால் கோட்டை நகரமாக அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி இங்கு 1915 முதல் 1930 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புராதன நகரம் பட்டியலில் இடம் பெறுவதற்கான போட்டியில் தில்லி மும்பையும் பங்கேற்றது. ஆனால் ஆமதாபாத் பெருமையை தட்டிக் சென்றுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.