குடியரசுத் தலைவர் வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜை அறிவிக்க வாய்ப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நிறுத்த வாய்ப்பு
குடியரசுத் தலைவர் வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜை அறிவிக்க வாய்ப்பு
Updated on
1 min read

புதுதில்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நிறுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட நபர் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட கூடாது என RSS உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகள் திட்டவட்டமாக கூறியுள்ளன. எனவே பாரதிய ஜனதா சார்பில் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பா.ஜனதா வகுத்து உள்ள அனைத்து தகுதிகளிலும் முதன்மையிடம் பிடித்து இருப்பவர் சுஷ்மா சுவராஜ். நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சித்தராம் யெச்சூரியை சந்திக்கும் போது பா.ஜனதா குழுவில் இடம்பெற்று உள்ள தலைவர்கள் சுஷ்மா பெயரை அறிவிப்பது தொடர்பாக பேசுவார்கள் எனவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com