ஆராய்ச்சிகல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

ஆராய்ச்சிகல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். 
Updated on
1 min read

ஆராய்ச்சிகல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

ஆற்காடு லட்சுமி கல்வி நிறுவனங்கள் சார்பில் இயங்கி வரும் ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் ஏ.எல்.ரவி தலைமைவகித்தார். கல்லூரியின் தலைவர் டி.லோகநாதன், துணைத்தலைவர் டத்தோ சண்முகம் ராமசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் திலகவதி வரவேற்றார் . விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 382 மாணவிகளுக்கு பட்டங்கள்  வழங்கி பேசியதாவது:  

நாட்டை நல்வழிப்படுத்தும் சமுதாய சிற்பிகளாக ஆசிரியர்கள் உள்ளனர். தன்னலமற்ற பணி ஆசிரியர் பணி. நாளைய ஆசிரியர்களாக வரவுள்ள நீங்கள் சிறந்த கல்வியை வழங்கி மாணவர்களின்   வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். தமிழகம் ஆராய்ச்சிக் கல்வி, தகவல் தொடர்பு துறைகளில் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.  

தமிழகத்தில்  13 பல்கலைக் கழகங்களில் காணொளி காட்சி பாட வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் உலக அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. எல்லோருக்கும் வேலை வாய்ப்புகள்   வேண்டும் என்பதற்கு ஏற்ப உயர்கல்வி வழங்கப்படுகிறது. மாணவிகள் தொலைநோக்கு பார்வை, ஆக்கப்பூர்வ மற்றும் கண்டுபிடிப்பு சிந்தனையோடு செயல்பட வேண்டும்.

சவால்களை வென்று சரித்திரம் படைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று பேசினார். ,வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன், எம்எல்ஏக்கள் என்.ஜி.பார்த்திபன், கோ.லோகநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுமைதாங்கி சி.ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புலவர் சீனி.சம்பத் தலைமையில் இன்னிசை பாட்டு மன்றம் நடைபெற்றது. மாலையில்   கல்லூரி ஆண்டுவிழா நடைபெற்றது.இதில் திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com