நோயை குணப்படுத்த யோகா சிறந்த உடற்பயிற்சி: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

நோயை குணப்படுத்த யோகா சிறந்த உடற்பயிற்சி: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

நோயை குணப்படுத்துவதற்கு யோகா சிறந்த உடற்பயிற்சி என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
Published on

விஜயவாடா: நோயை குணப்படுத்துவதற்கு யோகா சிறந்த உடற்பயிற்சி என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்கூர் கிராமத்தில் ஸ்வேர்ணா பாரத் அறக்கட்டளை மருத்துவ முகாமை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போது உள்ள சூழலில் மக்களின் வாழ்க்கை பயணத்தில் சுகாதார பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. நோயை குணப்படுத்துவதற்கு யோகா சிறந்த பயிற்சி. சிறந்த ஆரோக்கியத்திற்கு மக்கள் பாரம்பரியமான உணவுகளை பின்பற்ற வேண்டும். யோகாவை நடைமுறைப்படுத்தவும், போர்க்கால நோய்க்கு முறையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார். 

மேலும் ஏழைகளுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்கான பொறுப்பை, குறிப்பாக கிராமப்புறங்களில் போதுமான வசதி இல்லாத இடங்களில் சுகாதார சேவைகளை வழங்கும் பொறுப்பை சமூக அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாயுடு வேண்டுகோள் விடுத்தார். . 

பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவகல்லூரி அமைக்கவேண்டும் என்பதே. இந்த நாட்டிற்கு அதிகமான மருத்துவர்கள் கொண்டு வர பொது-தனியார் பங்கு அவசியம். மேலும் கணினி பயிற்சி பெற்ற 43 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

முன்னதாக  கன்னவரம் விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். 

ஆந்திர முதல்வர் சந்திரபா பாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள் சிலர் மற்றும் மூத்த அதிகாரிகள் கன்னவரம் விமான நிலையத்தில் துணை குடியரசுத் தலைவரை வரவேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com