நவீன சீன வரலாற்றின் புதிய சக்தி ஜி ஜின்பிங்

ஒரு நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், தன்னிறைவு என்பதெல்லாம் அந்நாட்டு மக்களின் உழைப்பு தொழில்நுட்பம் சார்ந்து
நவீன சீன வரலாற்றின் புதிய சக்தி ஜி ஜின்பிங்

ஒரு நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், தன்னிறைவு என்பதெல்லாம் அந்நாட்டு மக்களின் உழைப்பு தொழில்நுட்பம் சார்ந்து இருக்க கூடிய விசயம்தான் என்றாலும் நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆளூமை மிக்க ஒரு தலைவனின் முற்போக்கான, காலம்கடந்த சிந்தனையை பொறுத்தே அந்நாட்டை உலக அரங்கில் முதன்மை இடத்துக்கு கொண்டு செல்லும்.

அந்த வகையில் சீனாவை உலக அரங்கில் முதன்மை இடத்தில் தூக்கி நிறுத்தவே அந்நாட்டு மக்களும் பிரதமரும் கடுமையாக முயன்று வருகின்றன. சீன பொருள்களே இல்லாத இடம் இல்லை என்று சொல்லும்  அளவுக்கு அந்நாடு வர்த்தக ரீதியாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையில் மட்டும் அல்லாமல் தொழில் உற்பத்தியிலும் உலக அரங்கில் முதன்மை இடத்தை எட்டிப் பிடிக்க கடுமையாக உழைத்து வரும் நாடு ராணுவம், தொழில் நுட்பம் என எல்லாவற்றிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வருவதும் கவனிக்கத்தக்கது. 

சமீபகாலமாக அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதிலும் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவில் செல்வாக்கு மிகுந்த கம்யூனிஸ்ட் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் மாநாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற 18வது மாநாட்டில் சீன அதிபர் ஜி-ஜிங்பிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டு தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் அக். 24-ஆம் தேதி வரை மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்  கட்சியின் தலைமை பொறுப்பில் அதிபர் ஜி ஜின் பிங் மேலும் 5 ஆண்டுகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர். அதை தொடர்ந்து புதிய மத்தியக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் நடை முறை தொடங்கியது. அப்போது, தனக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும், தேசிய மாநாட்டை முறைப்படி தொடங்கி வைத்தும் அதிபர் ஜி ஜின் பிங் பேசுகையில், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி சிந்தனையை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகப் பின்பற்றி வருகிறது என்று கூறினார். 

மேலும்  வறுமை ஒழிப்புப் பணியில் கடந்த ஆண்டுகளில் தீர்க்க ரீதியிலான முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. முழு சீனாவிலும் 6 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வறுமை விகிதம் 10.2 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் ஒழுங்குமுறையை வலுப்படுத்தியுள்ளது. முழு கட்சியின் நம்பிக்கை மேலும் உறுதியாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல் 2050க்குள் சீனா  நம்பர்-1 நிலையை அடைய சர்வதேச உதவியுடன், தேசிய சக்திகள் உழைக்க வேண்டும். நமக்கு என்ன தேவையோ, அதை பெற வேண்டும்’’ மேலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், வழிகாட்டவும் புதிய நெறிப்படுத்துதல் குழு அமைக்க முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த யுகம், புதிய வரலாற்று நிலைமையில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பெறும் யுகமும், பொது மக்களின் கூட்டு செழுமையைப் படிப்படியாக நனவாக்கும் யுகமும், சீனக் கனவை நிறைவேற்றும் யுகமும், மனிதகுலத்துக்கு சீனா மேலும் பெரும் பங்காற்றும் யுகமாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com