80 வயதில் யஷ்வந்த் சின்ஹா வேலைக்கு தேடுகிறார் என்ற ஜேட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி!

80 வயதில் யஷ்வந்த் சின்ஹா வேலைக்கு தேடுகிறார் என்ற அருண் ஜேட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி தந்துள்ளார்.
80 வயதில் யஷ்வந்த் சின்ஹா வேலைக்கு தேடுகிறார் என்ற ஜேட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி!

புதுதில்லி: 80 வயதில் யஷ்வந்த் சின்ஹா வேலைக்கு தேடுகிறார் என்ற அருண் ஜேட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி தந்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, நாட்டின் பொருளாதார நிலையில் தற்போது நிலவும் குளறுபடிகளை மேற்கோள்காட்டி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கடுமையாக விமர்சித்தார். இதனை நான் இப்போது பேசவில்லை என்றால், தேசிய கடமையில் இருந்து தவறிவிட்டதாக அர்த்தமாகி விடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மத்திய அரசின் மீதான அவரது விமர்சனம் பாஜகவில் புயலை கிளப்பியது. 

யஷ்வந்த் சின்ஹாவின விமர்சனத்தை வரவேற்று உள்ள காங்கிரஸ், மத்தியில் உள்ள பாஜக அரசின் மீது கேள்வி கணைகளை தொடுத்து வருகிறது. இப்போது  பொருளாதாரம் தொடர்பான ‘யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டு தவறு என்றால், நிரூபித்து காட்டுங்கள்’ என பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா சவால் விடுத்து உள்ளது. 

தில்லியில் நேற்று நடைபெற்ற 'இந்தியா-70, மோடி-3.5' என்ற நூல் வெளியீட்டு விழாவில், யஷ்வந்த் சின்ஹா தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜேட்லி முதல் முறையாக நேற்று பதில் அளித்தார். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட தவறான கொள்கை முடிவுகளை ஒருவர் (ப.சிதம்பரம்) வசதியாக மறந்து விட்டார். மற்றொருவர் (யஷ்வந்த் சின்ஹா) 1998-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டுவரை மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தபோது, வாராக்காடன் 15 சதவீதம் வரை அதிகரித்துவிட்டதை மறந்துவிட்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கருத்து தெரிவித்ததன் மூலம், 80 வயதில் அவர் ஒரு வேலை தேடுகிறார். இந்த நூலுக்கு இந்தியா-70 என்று பெயரிடுவதற்குப் பதிலாக, '80 வயதில் வேலை தேடுபவன்' என்று பெயரிட்டிருந்தால் பொருத்தமாக இருக்கும். 

யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரியாக இருப்பது சவுகரியமாக இல்லை போலும். கொள்கைகளை விட்டுவிட்டு மனிதர்களை விமர்சிக்க தொடங்கி விட்டார். யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார். ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டதை இருவருமே மறந்து விட்டார்கள் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், ‘80 வயதில் அவர் வேலை தேடுகிறார்’ என்ற அருண் ஜேட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுக்கையில், “நான் வேலை கேட்டு விண்ணப்பமிட்டிருந்தால், அவர் (அருண் ஜேட்லி) அங்கு முதல் இடத்தில் அமர்ந்து இருக்க முடியாது,” என கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com