அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ராகுல்காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதாக   அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ராகுல்காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதாக   அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கு கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை, கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்தலில், காங்கிரஸ் தலைவராவதற்கு விருப்பம் தெரிவித்து, அக்கட்சியைச் சேர்ந்த 89 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, கடந்த 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு, திங்கள்கிழமை (டிச.11) கடைசி நாள். இந்நிலையில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், ராகுல்காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். கட்சியின் தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமான அறிவைப்பை வெளியிடார். 

ராகுல் காந்தி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் 16-ந் தேதி சோனியாகாந்தி மற்றும் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com