

வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுலவகத்தில் தொடங்கி கோடநாடு எஸ்டேட் வரை இந்த சோதனைப் பட்டியல் நீள்கிறது.
இந்த மெகா சோதனை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் றியிருப்பதாவது: -
சசிகலா பற்றிய தகவல்கள் தவிர்த்து எம்.கே (கருணாநிதி), மகள் (கனிமொழி) மோசடிகள் தொடர்பான 30 பக்க ஆவணங்களை அதிகாரிகளிடம் அளித்திருந்தேன்.
ஏன் இன்னும் அவர்கள் வீடுகளை சோதனை நடத்தவில்லை என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.