

சென்னை: சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறுவது அபத்தமானது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
மழை, வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை மாநகராட்சியில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணின் செய்தியாளர்களிடம் பேசும் போது கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கப்படும் புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை. அமெரிக்கா, லண்டனில் எடுக்கப்பட்டதை விட சென்னையில் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டோம் என்று கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய தினகரன் பருவமழை தொடர்பான எவ்வித முன்னேற்பாடோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலனை முற்றிலுமாக மறந்து அவர்களின் வலியையும், வேதனையையும் உணராமல் உள்ளது தமிழக அரசு.
லண்டன், மற்றும் அமெரிக்காவில் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட சீரமைப்பு முறைகளை காட்டிலும், தமிழகத்தில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறுவது அபத்தமானது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.