
அமராவதி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, தெலுங்கு தேச கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சைக்கிள் பேரணியை தொடங்கியுள்ளார்.
சைக்கிள் பேரணி ஆந்திர மாநிலம் வெங்கடாபலேம் கிராமத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி தொடங்கியுள்ளார். மேலும் அமைச்சர்கள், தெலுங்குதேசம் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சைக்கிளில் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) உறுதியளித்தபடி மாநில மறுசீரமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக அமல்படுத்தும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.