
மும்பை: மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண் பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த திங்கள்கிழமை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து பன்வெல் செல்லும் ரயிலில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. ரயில் குர்லா ரயில் நிலையத்தில் ரயில் நிற்பதற்குள் பெண் பயணி ஒருவர் தனது கையில் வைத்திருந்த பை ஒன்று தவறி நிலையத்தின் நடைமேடையில் விழந்துள்ளது. இதையடுத்து பையை மீட்பதற்காக ரயில் நிற்பதற்குள் கீழே குதிக்க முயன்றபோது அந்த பெண் பயணியின் கால் தவறியதால் ரயில் பெட்டியின் கைப்பிடியை பிடித்து தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் (ஆர்.பி.எஃப்), உடனே சுதாரித்துக் கொண்டு சக பயணிகளின் உதவியுடன், அந்த பெண் பயணியை நடைமேடை பகுதிக்கு இழுத்துக் காப்பாற்றினார். ரயில்வே பாதுகாப்பு படை வீரரின் விழிப்புணர்வால் ஒரு சோக சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.
ரயில் இயக்கத்தில் இருந்தபோது பெண் பயணி சமநிலையை இழந்து தொங்கியபோது, ரயில் மற்றும் மேடைக்கு இடையில் உள்ள இடைவெளியைக் கடந்து சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பெண் பயணியை காப்பாற்றிய பாதுகாப்பு படைவீரருக்கு சக பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.