நாளை 5 நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன், சுவீடன் நாடுகளுக்கு செல்கிறார் மோடி!

ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை திங்கள்கிழமை பிரிட்டன், சுவீடர் செல்கிறார். 
நாளை 5 நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன், சுவீடன் நாடுகளுக்கு செல்கிறார் மோடி!
Updated on
1 min read

புதுதில்லி: ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை திங்கள்கிழமை பிரிட்டன், சுவீடர் செல்கிறார். 

பிரிட்டன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் ஐந்து நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தில்லி உள்ள பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து சுவீடன் புறப்பட்டு செல்கிறார். 

இரண்டு நாள் பயணமாக சுவீடன் செல்லும் பிரதமர் மோடி, தலைநகர் ஸ்டால்ஹோமில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சுவீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு இந்தோ-நார்டியாக் முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்தியாவுடனான வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றை மேம்படுத்து குறித்தும், சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

அங்கிருந்து புதன்கிழமை மாலை (ஏப் 17) பிரிட்டன் செல்லும் மோடி, லண்டன் நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். வியாழக்கிழமை (ஏப் 18) பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். 

பின்னர் லண்டன் டவுன் ஹாலில் நடைபெறும் கூட்டத்தில் பிரிட்டனில் உள்ள இந்தியர்களிடையே அவர் உரையாற்றுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com