திருச்சியில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கேட் கீப்பர் பலி!

தண்டவாளத்தில் இருந்த சிகப்பு கொடியை அகற்றச் சென்ற கேட் கீப்பர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியானார்

திருச்சி: தண்டவாளத்தில் இருந்த சிகப்பு கொடியை அகற்றச் சென்ற கேட் கீப்பர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியானார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கண்ணுடையாம்பட்டியில், ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிந்து வந்தவர் மோகன்ராஜ்(23). இவருடைய தந்தை ஏற்கனவே கேட் கீப்பராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பின்னர், வாரிசு அடிப்படையில், மோகன்ராஜ் தந்தையின் பணிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மோகன்ராஜ் பணியில் இருந்த போது, மதுரையில் இருந்து திருச்சி வந்த ரயில் கடப்பதற்காக, ரயில் கேட்டை மூடியுள்ளார். அப்போது தான், ரயில் தண்டவாளத்தில் வைத்த சிகப்பு கொடியை அகற்ற மறந்துவிட்டதை எண்ணி சுதாரித்துக்கொண்ட மோகன்ராஜ், சிவப்பு கொடியை அகற்றுவதற்காக வேக வேகமாக ஓடி, எடுக்க முயற்சித்தார்.

அப்போது சிக்னல் கிடைத்ததும் வேகமாக வந்த வைகை எக்ஸ்பிரஸ், மோகன்ராஜ் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலில் சிக்கி மோகன்ராஜ் சம்பவ 
இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர், சுமார் அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டு, மோகன்ராஜின் உடல் மீட்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மற்றும் மணப்பாறை ரயில்வே போலீஸார், மோகன்ராஜ் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு விபத்தில், புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாங்குடியைச் சேர்ந்த சுப்பையாவின்(55) காளை அழைத்து வரப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த இந்தக் காளை யாரிடமும் பிடிபடாமல் வேகமாக ஓடியது. அப்போது, கரூப்பிலியன் ரயில்வே அருகே இருந்த தண்டவாளத்தை கடக்க முற்பட்டதில் திருச்சியில் இருந்து சென்ற ரயில் மோதியதில் காளை சம்பவ இடத்திலேயை உயிரிழந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com