ஏர் இந்தியா விமானத்தில் காக்பிட் பகுதிக்குச் செல்ல முயன்றவர் கைது 

மிலனிலிருந்து புதுதில்லியை நோக்கி பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் விமானத்தின் பைலட் அமர்ந்திருக்கும்
ஏர் இந்தியா விமானத்தில் காக்பிட் பகுதிக்குச் செல்ல முயன்றவர் கைது 


புதுதில்லி: மிலனிலிருந்து புதுதில்லியை நோக்கி பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் விமானத்தின் பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதிக்கு நுழைய முயன்றவர் கைது செய்யப்பட்டார். 

இத்தாலி நாட்டின் மிலன் நகரிலிருந்து புதுதில்லிக்கு நேற்று இரவு அஐ 138 என்ற விமானம் வானில் பறந்துகொண்டிருந்தது. அதில் பயணித்த பயணி குர்பிரீத் சிங் தனது விதிமீறல் நடத்தைக்காக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மிலனுக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மிலன் திரும்பயவுடன் அவர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு பிறகு ஏர் இந்திய விமானம், விமானப் போக்குவரத்து நடைமுறைகளில் ஒன்றான முழுமையான பாதுகாப்பு அனுமதியை மீண்டும் பெற்று மூன்று மணி நேரம் தாமதத்துடன் தில்லி வந்தடைந்தது. 

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விமான நிலையத்திலிருந்து அஐ 138 விமானம் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கியதும், குர்ப்ரீத் சிங் என்ற பயணி காக்பிட் பகுதிக்கு செல்ல முயன்றார்.

இவரது விதிமீறல் நடத்தையால் விமானம் திரும்பவும் தரையிறக்கப்பட்டு அவரை உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமானம் தில்லியை வந்தடைய 2 மணி 37 நிமிடங்கள் காலதாமதமானது.

அஐ 138 விமானத்தின் கேப்டன், 250 பயணிகள் விமானத்தில் இருந்தநிலையில், தில்லிக்கு சென்றபிறகு (தில்லிக்கு எட்டு மணி நேர பயணம்) அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து. மிலனுக்கு நாடு திரும்ப போதுமான வெளிச்சம் தேவைப்படும் என்பதால் மீண்டும் எரிபொருள் நிரப்ப முடிவு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com