கேரளாவில் தண்ணீரால் காணாமல் போனவர்களைக் கண்டறிய கூகுளின் புதிய அப்ளிகேஷன்

கேரளாவில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் காணாமல் போனவர்களைக் கண்டறியவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு
கேரளாவில் தண்ணீரால் காணாமல் போனவர்களைக் கண்டறிய கூகுளின் புதிய அப்ளிகேஷன்
Published on
Updated on
1 min read


திருவனந்தபுரம்: கேரளாவில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் காணாமல் போனவர்களைக் கண்டறியவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக கூகுள் தனது புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுப்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை கடந்த 8-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது. கடந்த 100 ஆண்டுகளில் வரலாறு காணாத கனமழையால் அங்குள்ள 14 மாவட்டங்களும் வெள்ள நீரில் மிதக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் தண்ணீரில் கண்ணீருடன் அம்மாநில மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கனமழை வெள்ளம் மற்றும் பல இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் 320க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 52,856 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தில் தவிக்கும் கேரள மாநிலத்துக்கு உதவ பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை அளித்து வருகின்றன.

இந்நிலையில், தண்ணீரால் காணாமல் போனவர்கள் மற்றும் தொலைத்தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டவர்களை கண்டறியவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக கூகுள் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுப்படுத்தியுள்ளது.

இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்களது கம்யூட்டர், செல்லிடைப்பேசிகளில் பயன்படுத்தலாம்.

கூகுள் தேடுதல் பக்கத்தில் (Google search) http://g.co/pf   என பதிவிட்டு, வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான இடங்களைக் குறிப்பிட்டு உங்களுக்குத் தேவையான தகவலைப் பெறலாம்.

சமூக ஊடகங்களில் தகவலைப் பகிர்ந்து கொள்வதற்கும், நாட்டிற்கும் அப்பால் இருந்து நிவாரண நிதி மற்றும் பொருட்களை சேகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்குவதில் மீட்பு குழுக்களுக்கு உதவிபுரிவது என்றாலும், சில சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், தற்போதைய சூழல்களில் காணாமற்போனவர்களை கண்காணிக்க உதுவதற்கும், சிதறிப்போன மக்களை கண்டுபிடிப்பதற்கு அரசுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com