
இஸ்லாமாபாத்: வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவுவதற்கு பாகிஸ்தான் தயாரக உள்ளது என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் 22-வது பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் கடந்த 18-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஒரு வாரமாக பெய்த வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரூ.19,512 கேடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரது டுவிட்டர் பக்கத்தில், ஷபாகிஸ்தான் மக்களின் சார்பாக கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்துகொள்வதாகவும், இயற்கை பேரிடர் பேரழிவில் இருந்து விரைவில் மீண்டுவர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு நாடுகள் அளிக்கும் ரூ.700 கோடி நிதியுதவியைப் பெற ஆர்வம் காட்டும் கேரள அரசு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும் என்றும், இயற்கைப் பேரிடரின் போது ஒற்றுமைக்கான நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்றுக் கொள்வதே சரி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். அவ்வாறு பெறவில்லை என்றால், அதனை மத்திய அரசே அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.