காலச்சுவடு - 2017

தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமியுடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
காலச்சுவடு - 2017
Updated on
23 min read

தமிழகம்
ஜனவரி
3    புதுச்சேரி சட்டப் பேரவை  முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவகுமார் காரைக்கால் அருகே வெட்டிக் கொலை.
4    அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு.
6    அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை விதித்த ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 
17    எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட எம்ஜிஆரின் உருவம் பொறித்த சிறப்பு  தபால் தலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
23    தமிழக  சட்டப் பேரவையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக 1960-ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
28    சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எரிவாயு கொண்டு சென்ற கப்பலும், டீசல் கொண்டு சென்ற கப்பலும் மோதிக் கொண்ட விபத்தில் கச்சா எண்ணெய் கலந்ததால் கடல் கடுமையாக மாசுபட்டது.
31    நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பிப்ரவரி
5    அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தமிழக சட்டப் பேரவை குழுத் தலைவராக  ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் முதல்வராகும் விதமாக  ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
8    சென்னை முகலிவாக்கத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் இளைஞர் தஷ்வந்த்தை போலீஸார் கைது செய்தனர்.
14    சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து, அதிமுக சட்டப் பேரவை குழுத்  தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி
அமைக்குமாறு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.
16    தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமியுடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
18    சட்டப் பேரவையில் நடைபெற்ற நம் பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பெற்று முதல்வர் எடப்பாடி
கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
18    சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தாக்கப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்
தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்தனர்.   
20    முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி பணியின்  முதல் நாளில் 500-க்கும்  மேற்பட்ட மதுக் கடைகளை
மூடுவது  உள்ளிட்ட 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக கையெழுத்திட்டார்.
23    அதிமுகவின்  துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி, தினகரன் பொறுப்பேற்றார்.
24    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடங்கினார்.

மார்ச்
11    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர்
உயிரிழந்தனர்.
13    தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 100 கோடியில் 30 மாவட்டங்களில் குடிமராமத்து  திட்டத்தை
காஞ்சிபுரத்தில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஏப்ரல் 
2    தருமபுரி காவல் நிலையத்தில்   உதவி ஆய்வாளராக   முதல் திருநங்கை பிரித்திகா யாசினி  பணி அமர்த்தப்பட்டார்.
5    சொத்துக் குவிப்பு  வழக்கில்,   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்ட  நிலையில் அவரை குற்றவாளி  என பிரகடனம்
செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது. 
 5    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு
விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்திரா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  
7    ஆர்.கே.நகர்  சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில்
 சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வீடு, நிறுவனங்கள்
என 50 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
17     அதிமுகவின்  இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் வழங்கியதாக தினகரன் மீது தில்லி குற்றப் பிரிவு போலீஸார்
வழக்குப் பதிவு செய்தனர். இது  தொடர்பாக  தில்லியைச் சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர்   கைது செய்யப்பட்டார். 
23    தில்லி ஜந்தர்மந்தரில்  41 நாள்களாகப் போராடிய  விவசாயிகளை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து போராட்டத்தைக்
கைவிட கோரிக்கை விடுத்தார்.  இதையடுத்து விவசாயிகள் போராட்டம் தாற்காலிமாக  கைவிடப்பட்டது.
24    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்  பங்களாவின் காவலாளி ஓம் பகதூர்  மர்மமான முறையில் கொலை
செய்யப்பட்டார்.
25    தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில்,  4 நாள் விசாரணைக்குப் பிறகு அதிமுக
துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.   

மே 
6    மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மருத்துவ கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து
செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தர முடியாது.
 தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி சத்தியநாராயணன்
உத்தரவிட்டார்.
10    பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளால்
ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவர் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
14    சென்னையில்  நேரு பார்க் முதல் அண்ணாநகர் பகுதியில்  அமைந்துள்ள திருமங்கலம் வரை  சுரங்க  ரயில் பாதையை  மத்திய
அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
31    சென்னை, தியாகராய நகரில்  உள்ள  பிரபல  சென்னை சில்க்ஸ் துணிக் கடை யில் தீ விபத்து ஏற்பட்டு, 10 மணி நேர
போராட்டத்துக்குப் பிறகு  தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அந்தத் துணிக்கடை முழுவதும் தீக்கிரையானது.

ஜூன் 
8    தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 முதல்
33 சதவீதம் அளவுக்கு குறைத்து பத்திரப் பதிவுத் துறை அறிவிப்பு வெளியிட்டது.
16    அம்மா உணவகம்,  அம்மா உப்பு, அம்மா சிமென்ட்,  அம்மா குடிநீர் போன்று  பொது மக்களின் பயன்பாட்டுக்கு  10 இடங்களில்
அம்மா பெட்ரோல் பங்க்  தொடங்கப்படும் என்று உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆர். காமராஜ் சட்டப்பேரவை  
பட்ஜெட்  கூட்டத்தில் அறிவித்தார்.
25    பொது மக்கள் பயன்பாட்டுக்கு  போரூர் மேம்பாலத்தைத்  திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப்
பாலத்துக்கு  பாரத ரத்னா புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர். மேம்பாலம்  என பெயரிடப்பட்டது.

ஜூலை 
14    தஞ்சாவூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்;  18 பேர்
காயமடைந்தனர்.
14    தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017- மசோதாவை
சட்டப் பேரவையில்  வீட்டுவசதி, நகர்ப்புற  வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
16    சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் உள்ள பேக்கரியில்  எரிவாயு உருளை வெடித்ததில் விருதுநகர்
மாவட்டத்தில் இருந்து தாற்காலிகப் பணியிட மாறுதலில் வந்த ஏகராஜ் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இந்த விபத்தில் போலீஸ்,
பொதுமக்கள் என 47 பேர் காயமடைந்தனர்.
25    தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
27    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை பிரதமர்
மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
27    சிவகங்கை மாவட்டம், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 2 பொருள்கள் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், அப்பொருள்கள் 2, 160, 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என  மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா
எழுத்துப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார்.  

ஆகஸ்ட்  
16    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கோரும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர்,
சட்ட அமைச்சகம்,  மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்தன. 
17    மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் போராளி இரோம் ஷர்மிளாவுக்கும், பிரிட்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டின்கோ
என்பவருக்கும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமணம்
நடைபெற்றது.
17    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
 21    கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு  எதிராக தனி அணியாகச் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம்,  
, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைந்ததையடுத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி
வழங்கப்பட்டது.
22    எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தினகரன்
ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர்    கடிதம் அளித்தனர்.
24    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் சிகிச்சை பெற வசதியாக தமிழக
அரசு நிபந்தனையுடன் கூடிய பரோல் அளித்தது. 
30    ப்ளூவேல்' எனப்படும் நீலத்திமிங்கல இணையதள விளையாட்டுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி
மாணவர் விக்னேஷ் பலியானார். 

செப்டம்பர் 
1     நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.  
6    நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது  58 உறவினர்களை விடுவித்து அமர்வு
நீதிமன்றம் பிறபித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
7    கோவை சோமனூரில்  பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் சாவு: பலத்த காயமடைந்த 19 பேருக்கு தீவிர சிகிச்சை.
12    சென்னையில் நடைபெற்ற  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்து தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
14    பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை விற்பனை செய்ததாக காவல் துணைக் கண்காணிப்பாளர் காதர் பாஷாவை  சிலைக் கடத்தல்
தடுப்புப் பிரிவு போலீஸார்  கைது செய்தனர்.
18    தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார்.
24     கடன் பிரச்னை காரணமாக மதுரையில் ஒரே குடும்பத்தைச் 8 பேர் தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் அருந்தினர். அதில்
 5 பேர் உயிரிழந்தனர். 
30     தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்.

அக்டோபர் 
4    தமிழகத்தின் தாவூத் இப்ராஹிம் என அழைக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டான் ஸ்ரீதர் தனபால் கம்போடியாவில் தற்கொலை.
20    நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாறில் பராமரிப்பு இல்லாத தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனைக்
கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட 8 ஊழியர்கள்
உயிரிழந்தனர்.
23    கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (30),  தனது மனைவி சுப்புலட்சுமி (28), மகள்கள்
மதிசாருண்யா (4), அட்சயபரணிகா (2) ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்.
24    உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்அவுட் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
27     தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராக
நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. ஆறுமுகசாமி  பொறுப்பேற்பு.

நவம்பர் 
1    ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு முதன்முறையாக யுனெஸ்கோ அமைப்பு விருது அறிவிப்பு. 
2    சென்னையில் கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 300 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்தது.
7    மக்கள் பிரச்னைகளை விவாதிக்க "மையம் விசில்'  என்னும் செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன்.
17    வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனையிட்ட வருமான வரித்
துறை அதிகாரிகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்திலும் சோதனை
மேற்கொண்டனர்.
17    சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வி.கே.சசிகலாவின் கணவர்
எம்.நடராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2010-இல் அளித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி
செய்தது.
23    அதிமுக பெயரையும்,  இரட்டை இலை சின்னத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.
பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
30    ஒக்கி புயலால் கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பேரிழப்பு.  நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயம்.

டிசம்பர் 
12    உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து
சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
13    சென்னையில் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு ராஜஸ்தானுக்கு தப்பிய கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற  மதுரவாயல்
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். 
20    மறைந்த முதல்வர் ஜெயலலிதா  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விடியோ பதிவை வெளியிட்டார் டிடிவி
தினகரன் ஆதரவாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வெற்றிவேல்.
24    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். இந்த தேர்தலில்
திமுக உள்ளிட்ட 57 பேர் வைப்புத்தொகையை இழந்தனர்.


தேசியம்

ஜனவரி
2 தேர்தலின்போது ஜாதி, மத ரீதியாக வாக்குகள் சேகரிப்பது முறைகேடான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
வெளியிட்டது.
2 ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் உணவருந்தும் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்
கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் அந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும்
அறிவுறுத்தப்பட்டது.
3 "ரோஸ்வேலி' நிதி நிறுவன முறைகேடு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக மேற்கு
வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
4 உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்றார். கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை
அப்பொறுப்பில் அவர் இருந்தார்.
10 ராணுவத்தினருக்கு தரமற்ற உணவு வழங்குவதாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பிரதாப் சமூகவலைதளத்தில் விடியோ
பதிவிட்டார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.
15 முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
16 சமாஜவாதி கட்சியையும், சின்னத்தையும் அகிலேஷ் யாதவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இது அக்கட்சியின் நிறுவனரும்,
அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங்குக்கு பின்னடைவாக அமைந்தது.
17 உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்த இரு வேறு ரயில் விபத்துகளில் 151 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர். இதன் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி இருந்தது கண்டறியப்பட்டது.
18 சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்பட்டார்.
21 ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 39 பேர் பலியாகினர்; 80-க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.
26 காஷ்மீரின் குரேஸ் பகுதியில் நேர்ந்த பனிச்சரிவில் சிக்கி பாதுகாப்புப் படையினர் 20 பேர் பலியாகினர்.

பிப்ரவரி
2 ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகார முறைகேடு வழக்கில் மாறன் சகோதர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து தில்லி
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக நாடு முழுவதும் 156
வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
6 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விருதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
13 மத்தியப் பிரதேசத் தேர்வு வாரியமான வியாபம் சார்பில் முறைகேடாக நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும், மாணவர்
சேர்க்கையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
13 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திரத்திலும் பாரம்பரிய விளையாட்டான
கம்பளாவை நடத்துவதற்கான சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
15 ஒரே செயற்கைக்கோளில் 104 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்தது இந்தியா. இஸ்ரோ வரலாற்றின் புதிய
மைல் கல் சாதனையாக இது பதிவானது.
17 பிரபல தென்னிந்திய நடிகை பாவனா, தம்மை சிலர் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகப் புகார் அளித்தார். இதில்
மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
19 உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்த விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்த நாகாலாந்து முதல்வர்
டி.ஆர்.ஜீலியாங், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
23 மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் 8 மாநகராட்சிகளை
அக்கட்சி கைப்பற்றியது.
24 ரூ.17,000 கோடி செலவில் அதிநவீன ஏவுகணையை ஒருங்கிணைந்து வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா - இஸ்ரேல் இடையே
மேற்கொள்ளப்பட்டது.

மார்ச் 
2 ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவித்தது பல்வேறு
சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
6 போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் ஐஎன்எஸ் விராட் கப்பல், கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றது.
8 இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
9 பணிக்குச் செல்லும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்க வகை செய்யும்
மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
10 எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாகக் கருதப்பட்ட சந்திராயன் 1 விண்கலம், இன்னமும் நிலவைச் சுற்றி வந்து
கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
11 சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தாக்குதலில் 11 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.
11 உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக மகத்தான வெற்றி பெற்றது. பஞ்சாபில் காங்கிரஸ்
ஆட்சியைக் கைப்பற்றியது. கோவா மற்றும் மணிப்பூரில் பெரும்பான்மை பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவோடு அங்கு
ஆட்சியமைத்தது பாஜக.
15 பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சரும், சமாஜவாதி மூத்த தலைவருமான காயத்ரி பிரஜாபதி
கைது செய்யப்பட்டார்.
15 பீரேன் சிங் மணிப்பூர் முதல்வராகப் பதவியேற்றார்.
16 பஞ்சாப் முதல்வரானார் அமரீந்தர் சிங்.
18 பாஜகவின் திரிவேந்திர சிங் ராவத் உத்தரகண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்றார்.
19 உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்பு.
22 ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பிளவுபட்டதால் கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்கியது தேர்தல்
ஆணையம்.
23 ஏர் இந்தியா ஊழியரை சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் காலணியால் தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து விமானத்தில் பயணிக்க அவருக்கு அனைத்து விமான நிறுவனங்களும் தடை விதித்தன.
27 அரசின் சமூக நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்ரல்
3 ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை.
3 வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் ஹிமாசல் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் ரூ.27 கோடி
மதிப்பு சொத்துகள் முடக்கம்.
4 விவசாயிகள் பெற்ற ரூ.36,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்தது.
10 பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண
தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்.
13 ஜம்மு - காஷ்மீரில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக ஸ்ரீநகர் இடைத் தேர்தலில் வெறும் 2 சதவீதம் மட்டுமே வாக்குகள்
பதிவாகின.
17 நாரதா ரகசிய விடியோ வழக்கில் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த 12 மூத்த தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
18 கடன் ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை அந்நாட்டு போலீஸார்
கைது செய்தனர். ஆனால், அதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
19 விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் விதமாக கார்களில் சிவப்பு சுழல் விளக்குப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. 
24 தில்லி மாநகாராட்சித் தேர்தலில் 50 வார்டுகளைக் கூட கைப்பற்ற இயலாமல் ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்தது.

மே
5 வாராக் கடனை வசூலிக்க வங்கிகளுக்கு உத்தரவிடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு பல்வேறு அதிகாரங்களை அளிக்கும் அவசரச்
சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
5 நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளான 4 பேரின் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
7 தில்லியில் சுகாதாரத் துறை சத்யேந்திர ஜெயினிடம் இருந்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக
பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு.
7 கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,900 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்த 399 நிழல் நிறுவனங்களைக் கண்டுபிடித்தது சிபிஐ.
9 பாகிஸ்தானில் இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு
இடைக்காலத் தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்.
9 தொழில் அதிபர் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
10 சிபிஎஸ்இ நடத்திய நீட் நுழைவுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதிய தேர்வர்களுக்கு வெவ்வேறு வகையான
கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டதாக எழுந்தப் புகாரால் சர்ச்சை.
12 சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய "நேஷனல் ஹெரால்டு' வழக்கில், வருமான வரித் துறை விசாரணைக்குத் தடை
விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
16 மேற்கு வங்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை வங்க மொழி கட்டாயப் பாடமாக அறிவிப்பு.
22 மத்தியப் பிரதேசத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலர் ஹெச்.சி.குப்தா
உள்ளிட்ட மூவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனா வழங்கப்பட்டது.
26 அஸ்ஸாம் மாநிலம், லோஹித் நதியின் குறுக்கே 9.15 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பபட்டுள்ள பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர்
மோடி.
26 நாடு முழுவதும் இறைச்சிக் கூடங்களுக்கு பசுக்களை விற்பனை செய்ய தடை விதித்தது மத்திய அரசு.
30 பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டுகள்
பதிவு.

ஜூன்
2 பிகாரில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி செய்து முதலிடம் பிடித்த மாணவன் கைது.
3 பிரிவினையைத் தூண்டுவதற்கு பாகிஸ்தானில் இருந்து நிதி கிடைப்பதாக வந்த புகாரை அடுத்து, தில்லி, ஹரியாணா, காஷ்மீர்
பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை.
5 இந்தியாவால் உருவாக்கப்பட்ட அதிக எடை கொண்ட "ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி-1' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
5 உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது மோதிய அரசுப் பேருந்து தீப்பிடித்ததை அடுத்து 24 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
7 மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
8 கேரளத்தில் 3, 4 நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் மீண்டும் மது விற்பனைக்கு கேரள அரசு ஒப்புதல்.
10 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 1- முதல் ஆதார் எண் கட்டாயம் என அரசு அறிவிப்பு.
13 லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்.
14 மேற்கு வங்க பள்ளிகளில் வங்க மொழியை எதிர்த்து, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டம்.
16 மும்பையில் 1993-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அபு சலேம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகளாக
அறிவிப்பு.
17 கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி.
20 நீதிபதி சி.எஸ்.கர்ணன், கோவை அருகே கைது.
23 ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து 39 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
27 ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஜூலை
1 நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது.
4 தலைமை தேர்தல் ஆணையராக ஏ.கே.ஜோதி நியமனம்.
7 லாலு பிரசாத், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 12 இடங்களில் சிபிஐ சோதனை.
7 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு கோரிய தமிழக அரசின்
மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
10 ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை.
18 நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறி மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்
மாயாவதி.
20 குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி
21 காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா விலகல்.
26 நிதீஷ் -லாலு கூட்டணி முறிவு; பாஜக கூட்டணியுடன் ஆட்சியமைக்க முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்.
31 சமையல் எரிவாயு மானியத்தை 2018-மார்ச்சில் இருந்து ரத்து செய்ய மத்திய அரசு முடிவு.

ஆகஸ்ட்
4 மரணச் சான்றிதழ் பெறவும் அக்டோபர் 1 முதல் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு.
5 மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ராஜீவ் குமார் நியமனம்
9 பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஆந்திரத்தில் சார் ஆட்சியராக பொறுப்பேற்பு.
11 நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு 
பொறுப்பேற்பு.
11 உத்தரப் பிரேதசம், கோரக்பூர் மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 22 குழந்தைகள் உள்பட 30 பேர் சாவு.
12 பாஜகவுடனான கூட்டணியை எதிர்த்த சரத் யாதவின் மாநிலங்களவை ஜேடியு எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவி பறிப்பு.
19 உத்தரப் பிரதேச மாநிலம், கதெளலி என்ற இடத்தில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 23 பேர் உயிரிழப்பு, 400 பேர் காயம்.
23 மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில், ஓபிசி பிரிவினரின் வருமான உச்ச வரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக
அதிகரிப்பு.
23 ஐஎன்எஸ் மீடியா முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற உதவியதாக, கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை.
24 அந்தரங்கம் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பு.
28 பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா தலைவர் குர்மீத் சிங் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து அவருக்கு 20
ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
28 டோக்கா லாம் அருகே, இந்தியா, சீனா படைகளுக்கு இடையே 72 நாள்களாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.
28 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்பு.

செப்டம்பர்
3 இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமினம். பொன்.ராதா கிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித்
துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
5 கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
7 மும்பையில் 1993-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தாஹிர் மெர்ச்சென்ட், ஃபெரோஸ் கான் ஆகிய
இருவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
8 விமானங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு, விமானத்தில் பயணிக்க ஆயுள்கால தடை விதிக்கப்படும் என
மத்திய அரசு அறிவித்தது.
8 தில்லி அருகே குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான்.
இச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. 
14 ஆமதாபாத் - மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர்
ஷின்சோ அபேயும் தொடங்கி வைத்தனர்.
20 கேரள மாநில முதல் பெண் டிஜிபியாக ஆர்.ஸ்ரீலேகா நியமிக்கப்பட்டார்.
29 மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

அக்டோபர்
4 பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமிக்கப்பட்டார்.
6 ஆயுர்வேத மருந்துகள் உள்பட 27 பொருள்களுக்கான சரக்கு, சேவை வரி குறைக்கப்பட்டது.
9 காற்று மாசுவை கட்டுப்படுத்த, தில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தாற்காலிக தடை விதித்தது. தீபாவளி நேரத்தில்
பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
9 கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
23 ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள் உள்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசின் சிறப்பு
பிரதிநிதியாக உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தினேஸ்வர் சர்மா நியமிக்கப்பட்டார்.
31 மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வியாபம் ஊழல் வழக்கில் 490 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்தது.
31 கர்நாடக மாநில முதல் பெண் டிஜிபியாக நீலாமணி என் ராஜூ பொறுப்பேற்றார்.

நவம்பர்
7 தலைநகர் தில்லியில் புகையுடன் பனியும் கலந்து மிக கடுமையான காற்று மாசு ஏற்பட்டது. கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம்
ஆகிய பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
10 மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் உள்பட 178 பொருள்களுக்கான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டது.
15 நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலகினார்.
17 பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அணியே, உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்று தேர்தல் ஆணையம்
அங்கீகரித்தது. இது, மூத்த தலைவர் சரத் யாதவ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
18 இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மானுஷி சில்லர், "உலக அழகி-2017' பட்டத்தை வென்றார். 17 ஆண்டுகளுக்கு பின்
இந்தியாவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது.
21 சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவின் தல்வீர் பண்டாரி (70) மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
28 ஹைதராபாதில் நடைபெற்ற சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அவரது
ஆலோசகருமான இவான்கா டிரம்ப் பங்கேற்றார்.

டிசம்பர்
7 இந்தியாவில் நடைபெறும் கும்ப மேளாவை, உலகிலேயே மதரீதியில் அதிக பக்தர்கள் பங்கேற்கும் விழாவாக யுனெஸ்கோ
அங்கீகரித்தது.
8 நொய்டா அருகே நிதாரியில் சிறுமிகள், பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில், தொழிலதிபர் மொனீந்தர் சிங், அவரது
உதவியாளர் சுரேந்தர் கோலி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
10 குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயல்வதாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த
தலைவர்கள் பாகிஸ்தானுடன் சதி ஆலோசனை நடத்தியதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை,
காங்கிரஸ் நிராகரித்தது.
14 எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது.
15 முத்தலாக் தடைச் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
15 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது.
16 காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுபேற்றார்.
16 நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
18 குஜராத், ஹிமாசலப் பிரதேச பேரவைத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகின. இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.
21 பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக
எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

உலகம்
ஜனவரி
1 ஐ.நா.வின் 9-ஆவது பொதுச் செயலராக ஆன்டோனியோ குட்டெரெஸ் பொறுப்பேற்றார்.
17 நைஜீரியாவை அச்சுறுத்தி வரும் போகோ ஹராம் பயங்கரவாத முகாம் என்று நினைத்து, பயங்கரவாதத்தால் புலம் பெயர்ந்த
அகதிகள் முகாம் மீது அந்த நாட்டு விமானப் படை நிகழ்த்திய குண்டு வீச்சில் 100}க்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகினர்.
20 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டின் 45}ஆவது அதிபராகப் பொறுப்பேற்றார்.
27 பயங்கரவாத பாதிப்புகளுக்குள்ளான 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடுக்கும் சர்ச்சைக்குரிய
உத்தரவை டொனால்ட் டிரம்ப் பிறப்பித்தார்.
30 பயங்கரவாதத்துக்கு உதவினால் பாகிஸ்தானிகளும் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டியதைத்
தொடர்ந்து, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் தலைவர் ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு
வீட்டுக் காவலில் வைத்தது.
இந்தியர்களுக்கு பெருமளவில் பயனளித்து வந்த அமெரிக்காவின் ஹெச்1}பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் சட்ட மசோதா
அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பத்து அணுகுண்டுகளை ஒன்றாக ஏந்திச் சென்று, தனித் தனி இலக்குகளைத் தாக்குதல் நிகழ்த்தும் புதிய ஏவுகணையை சீனா
வெற்றிகரமாக சோதித்தது.

பிப்ரவரி
1 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்த நாட்டு எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்தனர்.
14 வட கொரிய அதிபர் கிம் ஜோங்}உன்னின் சகோதரர் கிம் ஜோங்}நாமை, மலேசிய விமான நிலையத்தில் இரு பெண்கள் விஷப்
பொடியை நுகரச் செய்து படுகொலை செய்தனர். கிம் ஜோங்}உன்னின் தூண்டுதலில் பேரில் இந்த படுகொலை செய்யப்பட்டதாக
நம்பப்படுகிறது.
21 படகு விபத்தில் பலியான 87 ஆப்பிரிக்க அகதிகளின் உடல்கள் லிபிய கடற்கரையில் கரையொதுங்கின.
22 சூரியனிலிருந்து 39 ஒளிவருட தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தை, பூமியையொத்த 7 கோள்கள் சுற்றி வருவதை விஞ்ஞானிகள்
கண்டறிந்தனர். இதையடுத்து, பூமிக்கு வெளியும் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை எழுந்தது.

மார்ச்
4 நிறவெறித் தாக்குதலில் இந்தியப் பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாள்களில், அமெரிக்காவில் 43 வயது கடை
உரிமையாளர் ஹார்னிஷ் படேல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
10 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தென் கொரிய அதிபர் பார்க் கியூன்}ஹை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு நீதிமன்றம்
உறுதி செய்தது.
பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட ஹிந்து திருமணச் சட்டம், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல்
3 ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.
மற்றொரு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
4 சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ரசாயன குண்டு வீச்சில் 11 சிறுவர்கள் உள்பட 58 பேர் உயிரிழந்தனர். இந்தத்
தாக்குதலை சிரியா அரசு நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
7 ரஷியா ஆதரவளித்து வரும் சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா முதல் தாக்குதல் நிகழ்த்தியது. பொதுமக்கள் மீதான ரசாயனத்
தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியா அரசு விமானப் படை தளத்தில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது.
10 எகிப்தில் கிறித்துவ தேவாயலத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 43 பேரை படுகொலை செய்ததையடுத்து, அந்த
நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
13 பாகிஸ்தானையொட்டிய ஆப்கன் பகுதியில், தலிபான் பயங்கரவாதி முகாம்கள் மீதுஅணுகுண்டுகளுக்கு அடுத்தபடியாக மிக சக்தி
வாய்ந்த, "வெடிகுண்டுகளின் ராணி' என்றழைக்கப்படும் ஜிபியு}43 குண்டை வீசி அமெரிக்கா தாக்குல் நிகழ்த்தியது. இதில் 94
பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
15 சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட
தற்கொலைத் தாக்குதலில் 68 சிறுவர்கள் உள்பட 126 பேர் உயிரிழந்தனர்.
21 ஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குலில் 100}க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகினர்.
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மருத்துவ சேவைப் படையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி
மருத்துவரான விவேக் மூர்த்தியை, டிரம்ப் நிர்வாகம் பதவியிலிருந்து நீக்கியது.
26 முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கபட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா அறிமுகப்படுத்தியது.

மே
7 பிரான்ஸ் அதிபர் தேர்தலில், வர்த்தக வளர்ச்சிக்கு சாதகமான கொள்கைகளைக் கொண்ட இம்மானுவேல் மேக்ரன் வெற்றி பெற்றார்.
8 நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த 84 பள்ளி மாணவிகள் விடுவிக்கப்பட்டனர்.
9 தென் கொரிய அதிபர் தேர்தலில் இடதுசாரி ஆதரவாளர் மூன் ஜே-இன் அமோக வெற்றியடைந்தார்.
அமெரிக்க உளவுத் துறையான எஃப்.பி.ஐ. தலைவர் ஜேம்ஸ் கோமி, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வற்புறுத்தலால் ராஜிநாமா செய்தார்.
14 இணையதளம் மூலம் பரவிய "ரான்சம்வேர்' தாக்குதலால் 150 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
20 ஈரானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபர் ஹஸன் ரெளஹானி வெற்றியடைந்தார்.
22 பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 22
பேர் பலியாகினர்.
26 இலங்கையின் தெற்குப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக 91 பேர் உயிரிழந்தனர்.

ஜூன்
7 ஈரானில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக்
கொண்ட அந்த நாட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு, சன்னி பிரிவு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றது அதுவே முதல்
முறை.
13 வங்கதேசத்தில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளில் சிக்கி, ஏராளமான ராணுவத்தினர் உள்பட 105 பேர் உயிரிழந்தனர்.
14 பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
25 பாகிஸ்தானில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எண்ணெய் லாரியிலிருந்து, எரிபொருள் சேகரித்துக் கொண்டிருந்த 151 பேர், திடீரென
ஏற்பட்ட தீ வெடிப்பால் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஜூலை
4 கண்டம் விட்டு கண்டம் பாயும் தனது முதல் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக சோதித்தது.
9 ஒரு மாதமாக நீடித்த கடும் சண்டையைத் தொடர்ந்து, இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டதாக அந்த
நாட்டு ராணுவம் அறிவித்தது.
11 ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்}பாக்தாதி, தாக்குதலில் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைகள்
கண்காணிப்பு அமைப்பு அறிவித்தது.
28 பனாமா ஆவண ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, பாகிஸ்தான் பிரமதமர் நவாஸ் ஷெரீஃப் அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதி
நீக்கம் செய்தது.

ஆகஸ்ட்
17 ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில், கூட்டத்தினர் மீது வேன் மூலம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 16 பேர்
உயிரிழந்தனர்; 120 பேர் காயமடைந்தனர்.
21 சரக்கு எண்ணெய்க் கப்பலுடன் அமெரிக்காவின் ஜான் எஸ். மெக்கெய்ன் போர்க் கப்பல் மோதியதில் 10 வீரர்கள் மாயமாகினர்; 5 பேர்
காயமடைந்தனர்.
31 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃபை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்த அந்த நாட்டு நீதிமன்றம், அவரது
சொத்துகளை முடக்க உத்தரவிட்டது.

செப்டம்பர்
7 மெக்ஸிகோவில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
12 ரஷியாவிடமிருந்து எஸ்}400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் துருக்கி
கையெழுத்திட்டது.
19 மெக்ஸிகோவில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 217 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஆரம்ப நிலைப் பள்ளி
இடிந்து விழந்தில் பலியான 21 குழந்தைகளும் அடங்குவர்.
27 சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படும் என அந்த நாட்டு அரசு முதல் முறையாக அறிவித்தது.
28 அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான துப்பாக்கித் தாக்குதல் சம்பவமாக, லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 64
வயது அமெரிக்கர் நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்த மர்மம்
இன்னமும் நீடித்து வருகிறது.

அக்டோபர்
15 சோமாலியா தலைநகர் மொகதிஷுவில் நடத்தப்பட்ட மிகப் பயங்கர குண்டு வெடிப்புத் தாக்குதலில் 276 பேர் உயிரிழந்தனர்; 300 பேர்
காயமடைந்தனர்.
27 ஸ்பெயினிலிருந்து விடுதலை பெறுவது குறித்த பொதுவாக்கெடுப்பு முடிவின் படி, காடலோனியா மாகாணம் தனி நாடாக தன்னை
அறிவித்துக் கொண்டது. எனினும், இந்த பிரகடனத்தை ஸ்பெயின் நிராகரித்தது.
31 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத லாரி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

நவம்பர்
5 உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் மற்றும் நிறுவனங்களின் கடல் கடந்த ரகசிய வர்த்தக நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை
சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர்கள் அமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டது.
12 ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 500}க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
15 ஜிம்பாப்வேயின் நீண்ட கால அதிபர் ராபர்ட் முகாபேவிடமிருந்து ஆட்சியதிகாரத்தை அந்த நாட்டு ராணுவம் கைப்பற்றியது.
21 பொதுமக்களின் போராட்டம் மற்றும் ராணுவம் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜிநாமா
செய்தார்.
24 எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 235 பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர்
1 யேமனின் முன்னாள் அதிபரும், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான உறவை முறித்துக் கொண்டவருமான அலி அப்துல்லா சலே,
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
6 இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாக அறிவித்து அதிர்ச்சியலையை ஏற்படுத்தினார்.
8 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
9 ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமான சீன நிறுவனங்களிடம்
ஒப்படைத்தது.
21 சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை நிராகரிப்பதற்கான தீர்மானம், ஐ.நா.
பொதுச்சபையில் இந்தியா உள்ளிட்ட 127 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
24. அமெரிக்காவைத் தொடர்ந்து மத்திய அமெக்க நாடான கௌதமாலாவும் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது.


சினிமா
ஜனவரி
15 மெரினா புரட்சி போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு ஆதரவளித்தனர். 
21 கவிஞர் வைரமுத்து சிறுகதைகள் மலையாளத்தில் வெளியிடப்பட்டன. 

பிப்ரவரி
22 ஃபெப்ஸி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர்
ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டார். 
26 நகைச்சுவை நடிகர் தவக்களை காலமானார். 

மார்ச் 
1 பெண்கள் நலனை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக நடிகை வரலெட்சுமி சரத்குமார் தெரிவித்தார். இதன் மூலம்
பெண்கள் நலனுக்கான தனி அமைப்பை உருவாக்க இருப்பதாகவும் அறிவித்தார்.
1 சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் இங்கிலாந்து ராணியைச் சந்தித்து பேசினார். 
7 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் காக்க கலை நிகழ்ச்சிகள் நடத்துவேன் என்று அறிவித்தார் நடிகர் ராகவா
லாரன்ஸ்.
19 காப்புரிமை பிரச்னையால் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி பாட மாட்டேன் என்று பின்னணி
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்தார். 
20 காப்புரிமை பிரச்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் நடவடிக்கை சட்டப்படி சரியானது என்று பாடலாசிரியரும், கவிஞர்
வைரமுத்துவின் மகனுமான மதன் கார்க்கி தெரிவித்தார்.
29 நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இலங்கை செல்லவிருந்த ரஜினிகாந்துக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு
எழுந்தது. இதையடுத்து நேரம் கூடி வரும் போது சந்திப்போம் என இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதினார். 
31 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

ஏப்ரல் 
2 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்றார். 
8 திரைப் படங்களுக்கான 64 -ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். தேசிய விருதுக் குழு
ஒரு தலைபட்சமானது என்று அவர் அறிவித்தார். 
21 பாகுபலி படத்துக்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல என்று தெரிவித்தார்
நடிகர் சத்யராஜ். கன்னட மக்களின் மனம் புண்படுவதாகப் பேசியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
22 பாகுபலி 2 வெளியீட்டில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக நடிகர் சத்யராஜின் கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்தார். 

மே
1 தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 மூத்த சினிமா கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் வீதம் தங்க நாணயத்தைப்
பரிசாக வழங்கினார் நடிகர் விஜய்சேதுபதி.
15 தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. 

ஜூன்
2 சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது கலை. எனவே ஜிஎஸ்டி (சரக்கு சேவை வரி) விதிப்பு விவகாரத்தில் திரைப்படத்
துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
12 தமிழக விவசாயிகளின் நிலையை புரிந்து கொள்வது அவசியம் என்று மத்திய அரசை அறிவுறுத்தினார் நடிகர் விஜய். 

ஜூலை

3 தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் அடைக்கப்பட்டன. 
6 திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ஜி.எஸ்.டி. (சரக்கு சேவை வரி) அடிப்படையில்
புதிய சினிமா டிக்கெட் விலை நிர்யணம் செய்யப்பட்டது. 
25 நடிகர் சங்க புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கான இடைக்காலத் தடை நீங்கியதை அடுத்து நடிகர் சங்க கட்டடப் பணிகள்
உடனடியாக தொடங்கும் என அதன் செயலாளர் விஷால் தெரிவித்தார். 

ஆகஸ்ட்
1 சம்பள பிரச்னையை முன் வைத்து ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
9 எக்காரணத்தைக் கொண்டும் பெண்களை தரக்குறைவாக விமர்சிக்க கூடாது என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களை அறிவுறுத்தினார்.
விஜய் நடித்த படங்கள் குறித்து பெண் பத்திரிகையாளர் வெளியிட்ட கருத்துக்கு அவரது ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை
வெளியிட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்டார். 
15 குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார். 
26 சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா கொண்டாடப்பட்டது. 

செப்டம்பர்
13 ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால், இனி தடையின்றி படப்பிடிப்பு நடைபெறும் என ஃபெப்சி
அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார். 
21 நடிகர் கமல்ஹாசனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் சந்தித்து அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
22 பிரமதர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவைத் தெரிவித்தார். 

அக்டோபர்
3 திரையரங்குகள் மீது தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி குறித்த திரை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
8 கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை வைத்தது. 
25 தேசிய கீதம் விவகாரத்தில் என் தேசப்பற்றை சோதிக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
29 ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் விஷால் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்தார்.

நவம்பர் 
5 அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். 
16 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி அளித்தார். 
21 குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஐ.நா. அமைப்பான "யுனிசெஃப்'பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா அறிவிக்கப்பட்டார். 

டிசம்பர்
4 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என சேரன் தலைமையிலான
தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். 
5 தயாரிப்பாளர் சங்கச் செயலர் பதவியை ஞானவேல்ராஜா ராஜிநாமா செய்தார். 
26 நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது அரசியல் பிரவேசம்
குறித்து டிசம்பர் 31 - இல் அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


விளையாட்டு

ஜனவரி
2 பிசிசிஐ மறுசீரமைப்புக்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழுவின்
பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கம் செய்து
தாக்குர், கான்வில்கர், சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. பிசிசிஐ-யின் 88 ஆண்டுகால வரலாற்றில் இவ்வாறு
நடப்பது இது முதல் முறையாகும்.
7 இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மட்டேக் சான்ட்ஸூடன் இணைந்து பிரிஸ்பேன் சர்வதேச
டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். இது, அந்த சீசனில் அவரது முதல் பட்டமாகும்.
8 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன்
ஜோடி சாம்பியன் ஆனது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை ஓபனில் இந்திய ஆடவர் ஜோடி பட்டம் வென்றது இது முதல்
முறையாகும்.
29 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடாலை
வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது, அவரது 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

பிப்ரவரி
19 ஐபிஎல் கிரிக்கெட்டில் உள்ள ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக எம்.எஸ்.தோனி
ஒப்புக்கொண்டதாக தெரிவித்த அணி நிர்வாகம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை அந்தப் பொறுப்புக்கு நியமித்தது.

மார்ச்
15 ஐசிசி தலைவர் பதவியை, பிசிசிஐ முன்னாள் தலைவரான சஷாங்க் மனோகர் ராஜிநாமா செய்தார். போட்டி விதிமுறைகளில் அவர்
கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை பிசிசிஐ எதிர்ப்பதாக கூறப்பட்ட நிலையில், சஷாங்க் மனோகர் இந்த நடவடிக்கையை
மேற்கொண்டார்.

ஏப்ரல்
2 இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான
ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி பட்டம் வென்றார். இது, அவரது 2-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.
24 நியூஸிலாந்தில் நடைபெற்ற முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 101 வயது மூதாட்டியான மான்
கெளர், 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு நிமிடம் 14 விநாடிகளில் பந்தய இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.

மே
21 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை
வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

ஜூன்
8 இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியேலா டப்ரெளஸ்கியுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இந்த பட்டத்தை வென்ற 4-ஆவது
இந்திய வீரர் போபண்ணா ஆவார்.
11 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை
வீழ்த்தி சாம்பியன் ஆனார். அத்துடன், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
18 லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
சாம்பியன் ஆனது பாகிஸ்தான். இது அந்த அணியின் முதல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாகும்.
20 இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்தார். கேப்டன் விராட்
கோலி-கும்ப்ளே இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் இந்த முடிவை மேற்கொண்டார்.

ஜூலை 
5 ஆசிய ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கஜ் அத்வானி, லக்ஷ்மன் ராவத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பாகிஸ்தானை
வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
11 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், அணியின் இயக்குநராக இருந்தவருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்
தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
12 மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையை இந்திய கேப்டன்
மிதாலி ராஜ் பெற்றார். இந்தச் சாதனையை, மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது
அவர் எட்டினார்.
15 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, 7-5, 6-0 என்ற செட் கணக்கில்
அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ûஸ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
16 விம்பிள்டன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில்
குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் விம்பிள்டனில் 8-ஆவது முறையாக பட்டம்
வென்று சாதனை படைத்த அவர், மாடர்ன் எராவில் விம்பிள்டன் பட்டம் வென்ற வயதான வீரர் (35) என்ற பெருமையையும் பெற்றார்.
20 கடந்த 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த இந்தியாவின் ஒரே ஏடிபி போட்டியான "சென்னை ஓபன்' இனி, "மகாராஷ்டி
ஓபன்' என்ற பெயரில் புணேவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
23 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி
கோப்பையை வென்றது.

ஆகஸ்ட்
7 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வீரர் ஸ்ரீசாந்த் மீது பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்திருந்த நிலையில்,
அவர் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்கும் வகையில் அந்தத் தடையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
26 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால்,
ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் வீழ்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

செப்டம்பர்
3 இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்
வித்தியாசத்தில் வென்று, தொடரை 5-0 என கைப்பற்றியது. இந்தத் தொடரின்போது கோலி ஒருநாள் போட்டியில் தனது 30-ஆவது
சதத்தை எட்டி ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார். புவனேஸ்வர் குமார் முதல் முறையாக ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள்
வீழ்த்தினார்.
17 கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின்
நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
21 கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்
குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இந்தச் சாதனையை புரிந்த 3-ஆவது இந்திய வீரர் குல்தீப் ஆவார்.

அக்டோபர்
13 டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ஆம் ஆண்டு தொடங்கும் என்று ஐசிசி அறிவித்தது. இப்போட்டியில் 9 அணிகள்
இரண்டு ஆண்டுகளுக்கு 6 தொடங்களில் பங்கேற்கும். இதில் 3 தொடர்கள் சொந்த மண்ணிலும், 3 தொடர்கள் அந்நிய மண்ணிலும்
நடைபெறும். முதல் இரு இடம் பிடிக்கும் அணிகளிடையே இறுதிப் போட்டி நடைபெறும்.
22 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம்
வென்றது.

நவம்பர்
1 தில்லியில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய அணி
வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா.
5 மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா "சடன் டெத்' முறையில் சீனாவை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி
சாம்பியன் ஆனது. அத்துடன், 2018 உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதிபெற்றது.
8 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மேரி கோம் தென் கொரியாவின் ஹியாங் மி கிம்மை வென்று சாம்பியன்
ஆனார். இது, ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவரது 5-ஆவது பட்டமாகும்.
8 சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பின்ஷிப் போட்டியில் ஹெச்.எஸ்.பிரணாய் 21-15,16-21, 21-7 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தையும்,
சாய்னா நெவால் 21-17, 27-25 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவையும் வீழ்த்தி தங்களது பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
10 இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தும் அதிகாரம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு (நாடா) இல்லை
என்றும், தாங்கள் கடைப்பிடிக்கும் ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கைகள் போதுமானவை என்றும் அந்த அமைப்புக்கு எழுதிய கடிதத்தில்
பிசிசிஐ தெரிவித்தது.
13 கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இத்தாலி அணி இழந்தது.
20 கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-ஆவது
சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் அதிவேகமாக 50-ஆவது சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 8-ஆவது இடத்தை தென்
ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லாவுடன் பகிர்ந்துகொண்டார் கோலி.
23 இந்தி கிரிக்கெட் வீரர் ஜாஹீர் கானுக்கும், நடிகை சகாரிகா கட்கேவுக்கு மும்பையில் திருமணம் நடைபெற்றது.
27 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய
சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார். இந்த சாதனையை தனது 54-ஆவது போட்டியான, இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்
கிரிக்கெட்டின்போது அவர் எட்டினார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் லில்லீயின் 36 ஆண்டு சாதனையை அவர் முறியடித்தார்.

டிசம்பர்
3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச இரட்டைச் சதம் (6) அடித்த கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். இதன்மூலம்
பிரையன் லாராவின் சாதனையை (கேப்டனாக 5 இரட்டைச் சதம்) அவர் முறியடித்தார். இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில்
இதனை எட்டிய கோலி, டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் (243) பதிவு செய்தார்.
7 போர்ச்சுகல் கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரான்ஸ் விளையாட்டு பத்திரிகை சார்பில் வழங்கப்படும் "பேலன் தோர்'
விருதை 5-ஆவது முறையாக வென்று, ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸியை சமன் செய்தார்.
10 உலக ஹாக்கி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி
சாம்பியன் ஆனது. இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
11 இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி-பாலிவுட் நடிகை அனுஷ்கா திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.
13 இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம், ஒருநாள் போட்டியில் தனது 3-ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்
ரோஹித்.
17 துபை ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுசியிடம் வீழ்ந்து வெள்ளி வென்றார் இந்தியாவின்
பி.வி.சிந்து.
17 காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கம் வென்றார்.
18 இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3 ஆட்டங்கள் முடிந்த நிலையில், அவை அனைத்திலும் வென்று
தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
22 இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை
கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்தார். 

விருதுகள்
பிப். 13: சர்வதேச அளவில் இசைத் துறைக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது, அமெரிக்க செல்லோ இசைக் கலைஞர்
யோயோ மா மற்றும் இந்திய தபேலா இசைக் கலைஞர் சந்தீப் தாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மார்ச் 1: திருச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஜி.பூரணசந்திரனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது
வழங்கப்பட்டது. மனு ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய "சீனியர் மேன்' என்ற நூலை "பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற தலைப்பில் அவர்
மொழிபெயர்த்திருந்தார்.
மார்ச் 25: சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த விமான நிலையம் என்ற விருது சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு
வழங்கப்பட்டது.
ஏப். 7: "ஜோக்கர்' திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது. கவிஞர் வைரமுத்துவுக்கு 7-ஆவது முறையாக
தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சூர்யா நடித்த "24' படத்துக்கு இரு தேசிய விருதுகள்.
ஏப். 13: பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. சத்குரு ஜக்கி வாசுதேவ், பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு
பத்ம விபூஷண் விருது. பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு மறைவுப் பின் பத்ம பூஷண் விருது.
ஏப். 19: எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதமி விருது.
ஏப். 24: பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு 48-ஆவது தாதாசாஹேப் பால்கே விருது.
மே 2: இந்திய மகளிர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு பெரியார் விருதை வழங்கினார் முதல்வர் எடப்பாடி கே.
பழனிச்சாமி.
ஆக. 14: சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை அதிகாரிக்கான குடியரசுத் தலைவர் விருது சென்னை காவல் ஆணையர்
ஏ.கே.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
ஆக. 15: தமிழகத்தைச் சேர்ந்த 19-வயதுக்குள்பட்ட மகளிர் அணி முன்னாள் வீராங்கனை பிரீத்தி சீனிவாசனுக்கு தமிழக அரசின் கல்பனா
சாவ்லா விருது. கை, கால்கள் செயல்படாத நிலையில் உள்ள இவர், தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை
மேம்படுத்த பாடுபட்டு வருகிறார்.
அக். 2: அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய மரபியல்
(ஜெனடிக்ஸ்) விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு.
அக். 4: அல்சைமர் என்ற மூளை பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்த ஜாக்குவஸ் டுபோஷே, ஜோசிம் ஃபிராங்க், ரிச்சட்
ஹெண்டர்ஸன் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு.
அக். 5: ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸூவோ இஷிகுரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
அறிவிப்பு.
அக். 6: அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்காக போராடி வரும் ஐ.சி.ஏ.என். தன்னார்வ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
அறிவிப்பு.
அக். 9: அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தேலருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
அக். 31: கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.
டிச. 21: கவிஞர் இன்குலாபின் "காந்தள் நாட்கள்' கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமி விருது.]

பிரபலங்கள் மறைவு:
ஜன. 1: பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி (66) மாரடைப்பால் காலமானார்.
ஜன. 14: தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா (91) மறைவு.
பிப். 1: இந்திய தேசிய முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ.அகமது (67) காலமானார்.
நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
பிப். 6: "யுனெஸ்கோ கூரியர்' தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் மணவை முஸ்தஃபா (78) காலமானார்.
பிப். 19: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் (68) சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.
மார்ச் 6: சோசலிஷத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரபி ரே (91) காலமானார்.
மார்ச் 18: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் (82) லண்டனில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மார்ச் 23: பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் (85) மறைவு.
ஏப். 16: தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன் (83) சென்னையில் காலமானார்.
ஏப். 27: பழம் பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கன்னா (70) காலமானார்.
மே 11: ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மறைவு.
மே 18: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே (60) மாரடைப்பால் உயிரிழந்தார்.
மே 30: முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு திரைப்பட இயக்குநருமான தாசரி நாராயண ராவ் (75) உடல் நலக்குறைவு
காரணமாக உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் 125 படங்களை இயக்கிய கின்னஸ் சாதனையாளர் அவர்.
ஜூன் 6: திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மூத்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் (94) மறைவு.
ஜூன் 29: கந்த சஷ்டி கவசம் பாடல் புகழ் சூலமங்கலம் சகோதரிகளில் மூத்தவரான ஆர்.ஜெயலட்சுமி (80) காலமானார்.
ஜூலை 16: சிக்கிமில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்த நர் பகதூர் பண்டாரி (77) காலமானார்.
ஜூலை 24: இந்திய செயற்கைக்கோள் திட்டங்களின் தந்தை என்று போற்றப்பட்டும் உடுப்பி ராமச்சந்திர ராவ் (85) மறைவு.
ஜூலை 27: காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான தரம் சிங் (80) மாரடைப்பால் உயிரிழந்தார்.
செப். 19: ரூ.29,500 கோடி மதிப்புள்ள முருகப்பா குழுமத்தின் தலைவர் எம்.வி. முருகப்பா (81) காலமானார்.
அக். 24: அவளோட ராவுகள், தேவஸ்வரம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் ஐ.வி.சசி (69) காலமானார். 
நவ. 7: தமிழறிஞரும், பெரியாரியவாதியுமான மா.நன்னன் (94) மறைவு.
நவ. 20: நீண்ட காலமாக கோமா நிலையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி (72) காலமானார்.
டிச. 4: பழம்பெரும் நடிகர் சசி கபூர் (79) உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com