உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்: 2016-ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்!

கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய
உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்: 2016-ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்!
Published on
Updated on
1 min read


புதுதில்லி: கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில், கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் 54,723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், 40.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குழந்தை கடத்தல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்த விகிதம் 22.7 சதவீதம் ஆகும். கடந்த 2015-ஆம் ஆண்டில் 41,893 குழந்தைகளும், 2014-ஆம் ஆண்டில் 37,854 குழந்தைகளும் கடத்தப்பட்டு உள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பார்க்கிறபோது, குழந்தைகள் கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துத்தான் வருகிறது, குறைந்தபாடில்லை என்பது தெரியவந்துள்ளது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 8,132 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 15,379 பேர் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,229 பேர் ஆண்கள், 10,150 பேர் பெண்கள். இதில் 23,117 பேரில், 10,347 ஆண்களும், 12,770 பெண்கள் என மொத்தம் 23,117 பேர் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். 

மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகளுக்கு எதிராக 1,06,958 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2015-ஆம் ஆண்டில் 94,172 ஆக மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் ஏறக்குறைய 13.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 24 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது. 

இது 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குழந்தை கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதையே மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கிறது. 

இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குழந்தை கடத்துதல் குறித்து சமூக ஊடகங்களில் சமீபகாலமாக பகிரப்படும் தகவல்களால் அப்பாவிகள் மீதான தாக்குதலும், குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாகவும், குறிப்பாக கிராமப்புறங்களில் காணாமல் போகும் குழந்தைகள் நிலை குறிந்த தகவல் தெரிவதே இல்லை என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினார். 

2016-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிகமான குற்றங்கள், குழந்தைகள் கடத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டம் மற்றும், சிறுவர் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com