
துபையில் இருந்து தங்கத்தை பொடி செய்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.56 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
துபையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை திருச்சி வந்த ஏர் இந்தியா விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், பயணித்த சென்னையைச் சேர்ந்த முகமது அலிஜின்னா என்பவர் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கமும், சென்னையைச் சேர்ந்த நிஜாம் மைதீன், அப்துல் கரீம், முகமது ஆரிப், மசார் உசேன் என்பவர் ரூ. 56 லட்சம் மதிப்புள்ள 1835 கிராம் தங்கத்தை பொடி செய்து பேஸ்ட் வடிவில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து 1835 கிராம் தங்கத்தை பொடி பேஸ்ட்டை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.