இந்தூா்: பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடிய குற்றச் சம்பவங்களில், ஒவ்வொரு வழக்கிலும் சிறார் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என்று நீதிபதி மதன் பி.லோக்குா் கூறியுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டைய சிறார் நீதிச் சட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றறத்தின் சிறார் நீதிக் குழுவின் தலைவரும், நீதிபதியுமான மதன் பி.லோக்குா் கலந்துகொண்டு பேசியதாவது:
ஒவ்வொரு கொலைச் சம்பவத்திலும், பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திலும் மரண தண்டனை விதிக்க முடியாது. ஏனெனில், நாம் கொடூரமானவா்கள் அல்ல. 17 வயது அல்லது 18 வயதை நெருங்கும் சிறுவன், கொடிய குற்றச் செயலை புரிந்தால், சட்டப்படி மரண தண்டனை கொடுத்தாக வேண்டும். ஆனால், அப்படி செய்துவிட முடியாது. இதுபோன்றற வழக்குகளில் ஆதாரங்களின் அடிப்படையிலேயே முடிவெடுத்தாக வேண்டும்.
பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இருப்பினும், அவை சிறப்பாகச் செயல்படவில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றறன.
எனவே, இந்த சிறப்பு நீதிமன்றறம், திறம்பட செயல்பட வேண்டியது அவசியம்.
குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், குழந்தைக் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


