உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள்: இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

எந்த பல்கலைக்கழகங்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தீர்மானிப்பதற்கான ஆதாரத்தை உங்களுக்கு வழங்குவதுடன்,
உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள்: இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
Published on
Updated on
2 min read

2018-ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் எந்த இடத்தில் உள்ளது என்பதைவிட 3 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியை தருகிறது. 

இங்கிலாந்தைச் சேர்ந்த கியூ.எஸ். என்ற நிறுவனம், உலகெங்கிலும் 84 நாடுகளில் உள்ள ஏறக்குறைய 1,000 பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்த விளங்கும் பல்கலைக்கழகங்களை வரிசைபடுத்தி வெளியிட்டு வருகிறது. இந்த தரவரிசை பட்டியலின் படி, எந்த பல்கலைக்கழகங்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தீர்மானிப்பதற்கான ஆதாரத்தை உங்களுக்கு வழங்குவதுடன், நீங்கள் சிறப்பானவர்களாக சிறந்தவர்களாக விரும்பினால், நீங்கள் தேர்வு செய்து பயில வேண்டிய உலகளவிலான பல்கலைக்கழகங்கள் பட்டியல் இதில் இடம்பெற்றுள்ளன. 

கல்வி நிறுவனங்களில் இருக்கும் வசதிகள், கற்பிக்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

1. மாசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி): உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலின் படி, அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 7வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
சக கல்வியாளர்கள் மற்றும் முதலாளிகளிடையேயும் மிகவும் வலுவான நற்பெயரை பெற்றுள்ளது இந்த கல்வி நிறுவனம். 

2. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்: தரவரிசைகள் பட்டியலில் எம்ஐடியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், குறைந்த அளவே சர்வதேச மாணவர் விகிதத்தை பெற்றுள்ளதால் பின்னுக்கு தள்ளப்படுகிறது. 

3. ஹார்வேர்டு பல்கலைக்கழகம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவது இடத்தில் இருந்த ஹார்வேர்டு பல்களைக்கழகம், தற்போது இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் இருந்து கல்வியாளர்களிடையே அதன் புகழை தக்கவைத்துக் கொண்டிருப்பதே குறைந்தபட்ச ஆறுதல். 

4. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி: கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஒரு இடத்திற்கு முன்னேறி வருகிறது. தலைசிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு தேவையான விகிதத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சான்றுகள் உள்ளன.

5. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்: கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமான செய்தி என்றாலும், உலகில் சிறந்த மற்றும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட போட்டிகள் மீது முதலாளிகளிடையே நற்பெயரை பெற்று விளங்குகிறது. 

6. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்: தங்களின் பரம்பரை போட்டியாளர்களான கேம்பிரிட்ஜ் பின்னால் செல்லும்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இன்னும் சிறந்த விளங்க வேண்டும் என்றால் சர்வதேச மாணவர் மற்றும் சர்வதேச ஆசிரியர்களின் விகிதாச்சாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். 

7. லண்டன் பல்கலைக்கழக கல்லூரி: ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த மூன்று லண்டன் பல்கலைக்கழகங்கள், கடந்த ஆண்டு முதல் பிரிக்கப்பட்டதின் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சர்வதேச அளவில் பல்வேறுபட்ட மாணவர் அமைப்புகளில் ஒன்றாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரி உள்ளது.
 
8. இம்பீரியல் கல்லூரி லண்டன்: லண்டன் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு முன்னேறும் மற்றொரு லண்டன் பல்கலைக்கழகம் இம்பீரியல் பல்கலைக் கழகம். இந்த பல்கலைக்கழகம் குறிப்பாக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் வணிக கல்விகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

9. சிகாகோ பல்கலைக்கழகம்: இந்த பல்கலைக்கழகம் ஒன்பதாவது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தரவரிசையில் இருந்து ஒரு இடத்த்திற்ரு முன்னேறி உள்ளது. கல்வியாளர்களிடையே ஒரு வலுவான நற்பெயரை பெற்றுள்ளது இந்த பல்கலைக்கழகம். 

10. சுவிஸ் மத்திய தொழில்நுட்ப நிறுவனம்: பத்தாவது இடத்தை பெற்றுள்ள சுவிஸ் மத்திய தொழில்நுட்ப நிறுவனம், ஆசிரியர்கள் விகிதாச்சாரம் குறைந்ததால் மாணவர்களின் கற்கும் திறன் குறைந்துள்ளது. ஆனால் மேற்சொன்ன பல்கலைக்கழகங்களை விட குறிப்பிட்ட சில துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் 20வது இடத்திலும், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 25வது இடத்திலும், கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகம் 31வது இடத்தை பெற்றுள்ளது. 

இதில், மும்பையின் இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐஐடி) 17 இடங்கள் முன்னேறி 162வது இடத்திலும், பெங்களூர் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 20 இடங்கள் முன்னேறி 170வது இடத்த்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு 172வது இடத்தில் இருந்த தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் அதே இடத்தில் நீடிக்கிறது.  சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் 264வது இடத்தில் நீடிக்கிறது.

உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் 9 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com