நீரவ் மோடியை கண்காணிக்கவும்: ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம்

நீரவ் மோடியை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 
நீரவ் மோடியை கண்காணிக்கவும்: ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம்


புதுதில்லி: நீரவ் மோடியை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்ஸியும் ரூ.13,000 கோடி வரை கடன் வாங்கி விட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. ஆனால், வழக்குப் பதிவு செய்யும் முன்பே, நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், நீரவ் மோடிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்தது.

இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. அதில், பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவரை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நீரவ் மோடியை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com