ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் - பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் பதிகாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியை மத்திய பாதுகாப்புப் படை போலீஸார், காவல்துறையினர் இணைந்து சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் சரணடையுமாறு ஒலிப்பெருக்கி மூலம் வீரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களில் தீவிரவாதிகள் தாக்க தொடங்கினர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று விரிவுரையாளராக பணிபுரிந்த முகமது ரஃபி பாட் என்பதும், இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்படுபவர் என்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் எஸ்.எஸ். பி. வைட் கூறினார்.
தீவிரவாதிகளிடமிருந்து ஏகே 47 துப்பாக்கிகள், குண்டுகள், கட்டர், முதலுதவி மருத்துவ கிட் மற்றும் மேட்ரிக்ஸ் தாள்கள் உட்பட பல பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
ஸ்ரீநகரில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த இரண்டாவது முறையாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சி கச்சபேசப் பெருமான் சித்திரை உத்திரப் பெருவிழா கொடியேற்றம்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கும்பம்

ஆடுகளத்தின் மீது குறை சொல்லும் நபரல்ல நான்... தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மகரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


