
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நக்ஸலைட் நடத்திய திடீர் கண்ணி வெடிகுண்டு தாக்குதலில், துணை ராணவத்தை சேர்ந்த 6 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் உயிரிழந்து உள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் தகவல் வெளியாகி உள்ளது.
தண்டேவாடா மாவட்டம் சோல்நார் கிராமத்தில் துணை ராணுவத்தை சேர்ந்த பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் நக்ஸலைட் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தில் மாநில சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 6 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு வீரர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை நக்ஸலைட் தீவிரவாதிகள் பறித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் நக்ஸலைட்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நக்ஸலைட் ஒழிப்பு டி.ஐ.ஜி., சுந்தர்ராஜ் கூறுகையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 பேரில் 6 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் நக்சல்களை தேடும் பணியில் கூடுதல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த பகுதியில் வீரர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே.47 மற்றும் இரண்டு ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் உட்பட ஐந்து நவீன தானியங்கி துப்பாக்கிகளையும் நக்ஸல்கள் எடுத்து சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.