
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட இலங்கை விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக 227 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது.
இதனையடுத்து, உடனடியாக விமானத்தை விமானத்தை நிறுத்தியதால் 227 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக
உயிர்தப்பினர். பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, நிலைமை சீர் செய்யப்பட்டதும் ஓடுதளம் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.