மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் பாண்டுரங் புந்தலிக் பண்ட்கர் மாரடைப்பால் மரணம்
மும்பை: மகாராஷ்டிர மாநில வேளாண்துறை பாண்டுரங் புந்தலிக் பண்ட்கர்(67) மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சருமான பாண்டுரங் புந்தலிக் பண்ட்கர், ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள கே.ஜே.சோமய்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நீரிழிவு நேயாளியான பாண்டுரங் புந்தலிக் பண்ட்கர் சிகிச்சை பலனின்றி இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவர், அகோலா மக்களவை தொகுதியில் 3 முறை மக்களவைக்கு சென்றவர். பாஜகவின் மகாராஷ்டிரா மாநில தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டுரங் புந்தலிக் பண்ட்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், விவசாயிகளின் நலன்களுக்காக பணியாற்றுவதில் முன்னணியில் இருந்தவர். மகாராஷ்டிராவில் பாஜகவை வளர்க்க பாடுபட்டவர் என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.