கடந்த 20 ஆண்டுகளில் இயற்கை சீற்றங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் இந்தியாவுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
இயற்கையால் ஏற்படக்கூடிய இயற்கை பேரழிவு சீற்றத்தால், ஒவ்வொரு நாடும் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றன. அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
இதுகுறித்து ஐ.நா.வின் பேரிடர் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட, வெள்ளம், புயல், தீவிரவெப்பநிலை, நிலநடுக்கம், வறட்சி, காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு உள்ளிட்ட 7255 இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 43 சதவிகிதம் வெள்ளத்தால் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பேரிடர்களால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ஜப்பானும், 4 வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
வெள்ளத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1600 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ரூ.1800 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் ஐ.நா. பேரிடர் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

