பாஜக எம்எல்ஏ நாக்கை வெட்டி வருபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு

பெண்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை
பாஜக எம்எல்ஏ நாக்கை வெட்டி வருபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு
Published on
Updated on
2 min read


புல்தனா: பெண்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சுபத் சவ்ஜி அறிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம், கத்கோபர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம் கதாம் கடந்த வியாழக்கிழமை அவரது தொகுதியில் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி வந்தாவது அவர்களை சேர்த்து வைப்பேன்' என்றும் இதற்காக அவரது செல்லிடை பேசி எண்ணையும் வெளிப்படையாக அறிவித்தார். அவர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ராம் கதாம் கருத்துக்கு சிவசேனை உள்பட மாநிலத்தின் பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், ராம் கதாமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற அனுமதிப்போம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. மகளிர் அமைப்புக்கள் பலவும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், பெண்களின் மனதைப் புண்படுத்துமாறு ராம் கதாம் தெரிவித்த இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலளிக்கக் கோரி மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் 8 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக மகளிர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தாம் தெரிவித்த கருத்துக்கு ராம் கதாம் வியாழக்கிழமை மன்னிப்பு கேட்டார். சுட்டுரையில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், எனது அரசியல் எதிரிகள் நான் தெரிவித்த கருத்தை மாற்றி பொய்யாக பரவ விட்டிருக்கிறார்கள். தாயார்களையும், சகோதரிகளையும் புண்படுத்தும் படியான சூழலை உருவாக்கி விட்டார்கள். எனக்கு பெண்களின் மீது பெரும் மதிப்பு உள்ளது. பெண்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சுபத் சவ்ஜி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பெண்களின் மனதைப் புண்படுத்துமாறு பேசிய பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார். பெண்களை கடத்துவேன் என அவர் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com