புதுதில்லி: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைவரோ, கொள்கையோ இல்லை; மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுத்து நிறுத்துவது மட்டுமே அவர்களது நோக்கம் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றஞ்சாட்டினார்.
தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 2022-ஆம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், பாஜக ஆட்சியில் ஊழலிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுள்ளது. இந்தியா வெற்றி பெற சமூகம் உதவி செய்துள்ளது. கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பாஜக சரியான பாதை மற்றும் கொள்கைகளை கொண்டுள்ளது. பிரதமர் மோடியை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள், நம்புகிறார்கள். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். வரும் 2022-ஆம் ஆண்டிற்குள் தீவிரவாதம், மதவாதம், சாதியவாதம் இல்லாத புதிய இந்தியாவை படைப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும், பெரும்பாலான மாநிலங்களில் வீழ்த்த முடியாத சக்தியாக பாஜக உள்ளது என்றார். எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு எந்த திட்டமும் கிடையாது, தலைவரும் கிடையாது. அவர்களின் ஒரே திட்டம் நாட்டில் பிரபலமாக இருந்து வரும் பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த வேண்டுமே என்பதே அவர்களின் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



