பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு: முதல் முறையாக சென்னையில் டீசல் ரூ.78க்கு விற்பனை!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு: முதல் முறையாக சென்னையில் டீசல் ரூ.78க்கு விற்பனை!

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், இன்று திங்கள்கிழமை மீண்டு விலை அதிகரித்துள்ளது. சென்னையில் முதல் முறையாக ஒரு லிட்டர் டீசல் ரூ.78 -ஆக விலை உயர்ந்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக கடந்த சில வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியா 80 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாறு காணாத உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை உயர்த்தி வருகிறது. அதன்படி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.15-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.94-ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், நேற்றையை விலையை காட்டிலும் இன்று பெட்ரோல் 16 காசுகள் உயர்ந்து, ரூ.85.31 ஆகவும், டீசல் 6 காசுகள் உயர்ந்து ரூ.78-ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் டீசல் ரூ.78க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89.44-க்கும், டீசல் லிட்டர் ரூ.78.33-ஆகவும் அதிகரித்துள்ளது. தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.06-ஆகவும், டீசல் ரூ.73.78-ஆகவும் அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.75.57, சென்னையில் ரூ.77.94-ஆக டீசல் விலை உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.71 வரையிலும் அதிகரித்துள்ளது.

Petrol at Rs 82.06/litre (increase by Rs 0.15/litre) and at Rs 73.78/litre (increase by Rs 0.6/litre) in Delhi. Petrol at Rs 89.44/litre (increase by Rs 0.15/litre) and diesel at Rs 78.33/litre (increase by Rs 0.7/litre) in Mumbai.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com