வேலூர் தொகுதியை கைப்பற்றுகிறது திமுக: கதிர் ஆனந்த் 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட, திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில்
வேலூர் தொகுதியை கைப்பற்றுகிறது திமுக: கதிர் ஆனந்த் 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை



வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட, திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.  

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலின்போது, தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,553 வாக்குச்சாவடிகளில், தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் இந்தத் தொகுதியைச் சேர்ந்த 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகளும், 1,026 போலீஸாருக்கு தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

நொடிக்கு.. நொடி மாறும் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தால் வேட்பாளர்கள் முதல் கட்சிகளின் தொடர்கள் வரை மாறி மாறி ஏமாற்றங்கள் காணப்பட்டுள்ளது. 

இன்னும் 12 ஆயிரம் வாக்குகளே எண்ணப்பட நிலையில், பரபரப்பான எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,76,194 வாக்குகள் பெற்று 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஏ.சி. சண்முகம் 4,67,006 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 26,320 வாக்குகள் மூன்றாம் இடத்தை தொடர்கிறார். 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்று வரும் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com