கோவை: கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை வழித்தடத்தில் அந்த மாநிலத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, சொரனூர் பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக கோவை வழித்தடத்தில் கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மங்களூரு - நாகர்கோவில், மங்களூரு- சென்னை சென்ட்ரல், நாகர்கோவில் - எரநாடு விரைவு, கண்ணூர் -ஆலப்புழா விரைவு, கண்ணூர்- கோவை விரைவு, கோவை - கண்ணூர் பயணிகள் விரைவு, சொரனூர் - கோவை விரைவு, பாலக்காடு - திருநெல்வேலி விரைவு, திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகள் முடிந்த பிறகே, இந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும் எனசெய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.