டிடி செய்தி தொகுப்பாளர் நீலம் சர்மா காலமானார்

இந்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நீலம் சர்மா உடல்நலக் குறைவால் இன்று சனிக்கிழமை காலமானார்.
டிடி செய்தி தொகுப்பாளர் நீலம் சர்மா காலமானார்


புதுதில்லி: இந்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நீலம் சர்மா உடல்நலக் குறைவால் இன்று சனிக்கிழமை காலமானார்.

நீல் சர்மாவின் மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. எங்கள் அன்பான சக ஊழியர் நீலம் ஷர்மாவை இழந்துள்ளோம் என இரங்கல் தெரிவித்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட் நீலம் சர்மா கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1995 ஆம் ஆண்டு 20 வயதில் பணியில் சேர்ந்தார். பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். அவரது நிகழ்ச்சிகளில் தேஜஸ்வினி, பாடி சார்ச்சா உள்ளிட்டவை பிரபலமானவை. 

சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெண்களுக்கு வழங்கப்படும் நரிசக்தி புரஷ்கார் விருதை கடந்த ஆண்டு நீலம் ஷர்மாவுக்கு வழங்கி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த கவுரவித்தார்

தில்லி நிதியமைச்சர் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  "நீலம் சர்மா இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஏராளமான நினைவுகள். நிதானமான மற்றும் கருணையுள்ளம் கொண்டவரை அனைவரும் இழந்துள்ளோம்." என பதிவிட்டுள்ளார். 

மூத்த தொகுப்பாளர் நீலம் சர்மாவின் திடீர் மறைவு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்களை தெரிவித்துள்ளார் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com